2008ஆம் ஆண்டு 49வது உலக மேசைப் பந்து சாம்பியன் பட்டப் போட்டியின் குழு போட்டியை நடத்தும் உரிமையை சீனாவின் குவாங்சோ நகரம் பெற்றுள்ளதாக சர்வதேச மேசைப் பந்து சம்மேளனத்தின் தலைவர் ஷராரா மே முதல் நாள் அறிவித்தார். 1961இல் பெய்சிங், 1995இல் தியன் சின், 2005இல் ஷாங்கை ஆகிய வற்றை அடுத்து, உலக மேசைப் பந்து சாம்பியன் பட்டப் போட்டியை நடத்தும் சீனாவின் நான்காவது நகரமாக குவாங்சோ விளங்குகின்றது.

பெய்சிங் ஒலிம்பிக் பூங்காவின் மையப் பகுதியில் சீனத் தேசிய கூட்ட மையம் எனும் திட்டப்பணியின் கட்டுமானம் ஏப்ரல் 28ஆம் நாள் துங்கியது. இந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 2 லட்சத்து 70 ஆயிரம் சதுர மீட்டராகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, வாள் வீச்சு போட்டியும், ஏல் கை துப்பாக்கி சூடும் போட்டியும் இங்கு நடைபெறும். அதேவேளையில், சர்வதேச ஒலிபரப்பு மையமயும் தலைமை செய்தித்துறை மையமும் இங்கு பணிபுரியும்.
பெய்சிங் ஒலிம்பிக் ஆயத்தப் பணி 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது உணவுப் பாதுகாப்புக்கு உதரவாதம் தரும் பொருட்டு, இது தொடர்பான செயல் திட்டத்தை பெய்சிங் மாநகரம் இவ்வாண்டு வகுத்து செயல்படுத்தத் துவங்க உள்ளது. ஒலிம்பிக் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் தளம், ஒலிம்பிக் கிராமம், விளையாட்டு அரங்கம், சுற்றுப் பயணத்துக்கான இயற்கை காட்சியிடங்களிலுள்ள உணவுப் பொருள் கடை, சூப்பர் மாகெட், உணவு விடுதிகளின் சேவை முதலியவை அப்போது கண்காணிக்கப்படும். பெய்சிங் மாநகர உணவுப் பொருளுக்கான பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பொறுப்பாளர் ஒருவர் மே முதல் நாள் இதை தெரிவித்தார்.

மோட்டார் வாகனப் ஓட்டப் போட்டி 2005ஆம் ஆண்டு உலக மோட்டார் வாகன ஓட்டச் சம்பியன் பட்டப் போட்டியின் மூன்றாம் சுற்று மே முதல் நாள் சீனாவின் ஷாங்கை மாநகரில் நடைபெற்றது. உலகின் உச்ச நிலை மோட்டார் வாகன ஓட்டப் போட்டி, சீனாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். GP பிரிவுப் போட்டியில் யாமாஹா அணியை சேர்ந்த இத்தாலியின் புகழ் பெற்ற வீரர் வலேந்தினொ. ரோசி சாம்பியன் பட்டம் பெற்றார். கவசாக்கி அணியைச் சேர்ந்த பிரேஞ்சு வீரர் ஒலிவிர். யாக் இரண்டாம் இடத்தையும் ஹொங்தா(HONDA) அணியைச் சேர்ந்த இத்தாலி வீரர் மார்கோ.மேலாந்த்ரி(MARCO MELANDRI) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
சைக்கிள் மூல சுற்றுப் பயணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றை பிரச்சாரம் செய்யும் பொருட்டு, சீனாவின் ச்சிங் தௌ நகரைச் சேர்ந்த 6 முதியவர்கள் சைக்கிள் மூலம் முழு சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்த 6 முதியவர்களில் ஒருவர் பெண், ஐவர் ஆண்கள். மிக இளைந்தவருக்கு 56 வயது, மிக முதியவருக்கு 72 வயது. மே திங்கள் பத்தாம் நாள் அவர்கள் புறப்படுவர். இரண்டரை ஆண்டுகாலத்தில் இப்பயணத்தை முடித்துக்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

டென்னிஸ் மகளிருக்கான தொழில்முறை டென்னிஸ் போட்டியின் எஸ்தோரில் (ESTORIL) ஒப்பன் போட்டியின் இரட்டையர் இறுதிப்போட்டி ஏப்ரல் 30ஆம் நாள் நடைபெற்றது. சீன வீராங்கனைகளான லீ திங் சுன் தியன் தியன் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது. மே முதல் நாள் நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை லீ நா செக் வீராங்கனை சாபாரோவாவிடம்( SAFAROVA) தோல்வி கண்டு இரண்டாம் இடம் பெற்றார். ஆடவருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டின வீரர் GASTON GAUDIO சாம்பியன் பட்டம் பெற்றார்.
|