• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-09 12:37:49    
ஜோதிலட்சுமியின் கடிதம்

cri
வி--------பாலகுமார், உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது. ஏற்கனவே பல நேயர்கள் தொலைபேசி மூலம் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்கின்றனர். அவர்கள் விரைவில் cri sms net இச் சேர்வார்கள். பேசுவதற்கு செய்திகள் இருக்கும் போது முயற்சிக்கு பஞ்சமா என்ன ரா--------நாமக்கல் மாவட்டம் பொட்டி ரெட்டிபட்டி நேயர் மு தாமோதரன் கடந்த ஜனவரி திங்களில் நாம் ஒலிபரப்பிய பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக 6-1-2005 அன்று நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது. 7-1-2005 சீனாவிற்கு அப்பால் நிகழ்ச்சியில் பெருந்துறை கே பரமசிவன் கூறிய கருத்துக்கள் நன்றாக இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார். வி--------பாராட்டுக்களுக்கு நன்றி நேயரே. அடுத்த கடிதம் ரா-------பெரம்பலூர் மாவட்டம் தேவனூர் நேயர் ஜோதிலட்சுமி நமது விகழ்ச்சிகள் பற்றி பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக சீன உணவு அரங்கம் பகுதியில் வனுவல் பற்றியே கூறுகிறீர்களே. ஒரு மாறுதலுக்காக வேறு உணவு வகைகளை அறிமுகப்படுத்தக் கூடாதா என்கிறார். உலரம் ஒரு சீனப் பழமொழியை தமிழில் ஒலிப்பரப்புங்கள். செய்தித் தொகுப்புக்கள் அதிகமாக உள்ளன. குறைத்துக் கொண்டு நேயர்களுக்கு பயனுள்ள வேறு நிகழ்ச்சிகளைபச் சேர்க்கலாமே என்று கூறுகிறார். வி-------ஜோதிலட்சுமி அவர்களே. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் உங்களுக்கு இப்போது மாறுதல் தெரிந்திருக்குமே. இன்னும் ஒரு தகவல். பெய்ச்சிங் நகரில் சமையல் கலைஞர்களாக உள்ள சில தமிழர்களை கண்டுபிடித்திருக்கிறோம். கூடிய விரைவில் அவர்கள் எளிய தமிழில் சீன உணவு சமைப்பது பற்றி விளக்குவார்கள். சரிதானே ராஜா. ரா--------ஆமாம். இது தொடர்பாக நானும் கலைமகளும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்புறம் செய்தித் தொகுப்பு. வி-------செய்தித் தொகுப்புக்களை குறைக்கும் வாய்ப்பு இல்லை. ரா-------நம்மைச் சுற்றி உள்ள உலகில் தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அது பற்றி விரிவாக சொல்ல வேண்டியது எமது கடமை அல்லவா. மேலும் ஒலிபரப்பின் முக்கிய நேக்கமே தகவல் தருவது தானே. இல்லையா. வி-----ஆமாம். சரி அடுத்த கடிதம் ரா------கோவை மாவட்டம் தென் பொன்முடி நேயர் மணிகண்டன் எழுதியுள்ளார். நேயர் நேரம் நிகழ்ச்சியில் நேயரின் பெயருடன் ஊர் பெயரும் மாவட்டத்தின் பெயரும் கூறுங்கள் என்கிறார். வி-------அப்படித்தானே இப்போது செய்கிறோம் நீங்கள் கவனிக்க வில்லையா