• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-10 17:36:14    
இலங்கையின் மாணவரின் கவிதை

cri
ரா------நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் நேயர் ஏ மாணிக்கம் ஜப்பானின் புதிய வரலாற்றுப் பாட நூல் பற்றி பி லூசா அம்மையார் அவர்கள் வழங்கிய செய்தித் தொகுப்பு பல தகவல்களைத் தந்தது. வரலாற்றில் ஜப்பான் இழைத்தது போன்ற கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். மேலும் மலர்விழி வழங்கிய சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் தற்போது சீனாவில் மின்னணு அடையான அட்டை வழங்கப்படுவதாக அறிந்தேன். இத்தகைய அட்டை தீவிரவாதிகளை அடையாளம் காட்ட உதவும் என்று கூறுகிறார். வி-------மாணிக்கம் அவர்களே மணியான கருத்துக்களை கூறியுள்ளீர்கள். ஆனால் கடிதத் தாளில் தேதி குறிப்பிடவில்லை. பொதுவாக எந்தக் கடிதம் எழுதினாலும் தானின் வலதுவக்க மூலையில் தேதியும் ஊர்பெயரும் எழுதுவது நடைமுறை சரிதானே. ரா-------இலங்கை புதிய காத்தாங்குடி நேயர் ஏ எஸ் பாத்திமா மஃபாஸா ஏதென்ஸ் ஒலிம்பிக் பந்தயங்களில் இரண்டாவது இடம் வந்த சீனா 2008 பெய்ச்சிங் ஒலிம்பிக்யில் முதல் இடத்தைப் பெற வேண்டும் என்று வாழ்த்திவிட்டு இலங்கை நாட்டைச் சீரழித்த சுனாமி கொடுமை பற்றி ஒரு கவிதை அனுப்பியுள்ளார். வி--------அப்படியா, படியுங்கள் ரா-------சுனாமி என் சநிதனைக்குள் ஓராயிரம் பட்டாம் பூச்சிகள் எனை ஆர்ப்பிரக்கின்றன இருதயம் இடிந்து-உள்ளம் உடைந்து விட்ட போதிலும் இவளது பேனா முனை இன்னும் கண்ணீர் சிந்துகிறது பாரினில் பரினமித்த-எம் மனிதப்பின்டங்கள் அதோ கடலோடு கனாந்து காற்றலைகளின் மரண ஓலமாக யுத்தங்கள் ஓய்ந்து இரத்தம் நீர்ந்து கனவுகள் கலைந்து நிஜங்களே நில்லான போது எங்களின் பாசங்கள் பரிதவிக்கின்றன பத்தங்கள் ஊமையாகி விட்டன உதிரம் உரைந்து விட்டது எத்தனையோ மானிட சிதிலங்கள் அந்த நீரலைக்குள் இன்னும் எத்தனையோ கனவுப் பஷ்பங்கள் இந்த பூமித்தாயின் மடிதனில் கண்ணீயாக நானைய விடியலை காண எங்கும் மழலையின் கற்பணைகள் கனாமியின் சுடிதாருக்குள் சிக்குண்டனவோ துக்கம் தொண்டையை அடைக்கிறது துயரம் உயிரை குடிக்கிறது விதி விளையாடி விட்டு வேடிக்கை வார்க்கிறது தேவன் வகுத்த நாடகத்தில் நம் தேசமும் ஓர் பரத்திரமோ தேகங்கள் சிதைந்தாலும் கனவுகள் குலைந்தாலும் தற்பனையே கலைந்தாலும் நம் உள் உள்ளக்குல் இருக்கும் உணர்வுகளை ஒரு முறை நன் நெறியில் சீன்டுவோம்-இனி சிதைந்த எம் தேசத்தாய் சுவர்க்கத்தின் அந்தப்புர நாயகுயாக மிளிரட்டும் வி-----கவிதை நன்றாக இருக்கிறது. எந்ஞ்சத்தைத் தொடுகிறது