கலைவாணன்ராதிகா நன்றி தெரிவிப்ப்து
cri
ரா------ஒரு தகவல் தெரியுமா, இந்தக் கவிதை அனுப்பிய பாத்திமா ஒரு பாடசாலை மாணவி சுனாமியால் உடைமைகளை இழந்து தவிப்பவர்
வி------அவருடைய உள்ளத்தின் வேதனையை மற்ற நேயர்களும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறோம் சரி அடுத்த கடிதம்
ரா------பாடசாலை மாணவியின் கடிதம் பார்த்தோம். இனி ஒரு ஆகிரியரின் கடிதம் தருமபுரி மாவட்டம் கடத்தூர் நேயர் வி மாதேஷ் எழுதியது. சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் வசந்த விழா பற்றி கேட்பதற்கு ஆப்வ மூஜ்ஜவகார இருந்தது. விவசாயிகள் பல நூறு மைல் தொலைவில் இருந்து விழா கொண்டாட சொந்த ஊருக்குத்திரும்புவது இனிமையானது என்று கூறிவிட்டு ஒரு விவந்தவிழா கவிதை எழுதியுள்ளார்
வி------மாணவியின் கவிதை கேட்போம். இப்போது ஆசிரியரின் கவிதையா, படியுங்கள்
ரா------அசந்த விழாவே வருக
வளமான வாழ்வினையே தருக
வகுத்த மெல்லாம் வழியற்று போய்விடும்
வசந்தம் வந்து நம் வாழ்வில் ஒளியேற்றும்
தொலை தூரம் சென்றவர் கூட திரும்பிடுவர்
தொன்மையான வீட்டிற்கே வந்திருவர்
தொன்று தொட்ட பழமையெல்லாம் சிறப்பாகும்
தொழுதிடலாம் அனுதினமும் நன்மையாகும்
வசந்த விழா பற்றிய செய்திகளை வகையாக நாமெல்லாம் தெரிந்திடவே.
செஞ்சீனத்து வானொலியாம் criயின் செந்தமிழ் ஒலிபரப்பில் கேட்டிடலாம்
வாழ்க தமிழ்
வாழ்க சீன வானொலி
வி------கவிதை அருமை. மற்ற நேயர்களும் விரும்பிக் கேட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். சரி அடுத்த கடிதம்
ரா------சேலம் பாதிமா நகர் S R D பாலசுப்பிரமலையம் பிப்ரவரி திங்களில் எழுதியது. சீனாவின் வரிவிழிப்பு முறை, செய்தித் தொகுப்பு நன்று. சீனப் பண்பாட்டில் மோசுவோ இனமக்களின் புதுமையான காதல் வாழ்க்கை வியப்பாகவும் நியாயமாகவும், அதே வேளையில் கட்டுப்பாடு நிறைந்ததாகவும் இருந்தது. நன்றி. சீனக் கதையில் இனிய உதயம் நாவல் ராஜாராம் வாவித்ததை கேட்ட போது சில வேளைகளில் சிவாஜிகணேசன் வசந்த மாளிகையில் பேசுவது நினைவிற்கு வந்தது. அவனின் கடுமையை இவளின் கடமை வென்றது. 28வது வயதில் அவள் காதலைப் பற்றி தாமதமாக தெரிந்து கொண்டது. சமாதானமில் லாமல் போனது. மூன்றாவது
பகுதிக்காக காத்திருக்கிறேன். சென்னைப் பல்கலைக் கழகத்தில் சீன மொழி சான்றிதழ் படிப்பால் பலர் பயனடைவர் என்று எழுதியுள்ளார்.
வி------கருத்துக்களுக்கு நன்றி.
ரா--------பெரம்பலூர் மாவட்டம் உத்தரக்குடி நேயர் கலைவாணன் ராதிகா எழுதியது. ஜனவரி பிப்ரவரி திங்கள் நிகழ்ச்சிகள் பற்றஇ கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி திங்கள் 31ம் நாள் அன்றைய இரண்டாவது செய்தி தொகுப்பான ஈராக் தேர்தல் பற்றி கூறுகையில் ஒரு புதுமையான செயலை கேட்டு திருக்கிட்டு போனோர். ஒவ்வொருவரும் ஜனநாமாக உரிமையில் வாக்களஇப்பது அவரவரின் கடமையான ஒன்றாகும். ஆனால் சதாம் அவர்களின் சொந்த ஊரான அவரது ஊரில் ஒருவர் மட்டும் வாக்களித்தது ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்று தானே அர்த்தம் செய்தி தொகுப்பை வாசித்த சகோதரர் தமிழ் செல்வம் அவர்களுக்கு நன்றிகள் பலபல...
|
|