• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-10 17:35:06    
ஏழை மாணவியின் பல்கலைக்கழக வாழ்க்கை

cri
2004ம் ஆண்டின் கோடைக்காலத்தில், சீனாவின் சான்சி மாநிலத்தின் கிராமத்திலிருந்து வரும் பான் லின் லீ எனும் மாணவி, மாநிலத்தின் தலைநகரான சி அன் நகரத்திலுள்ள வடமேற்கு தொழில் துறை பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். குடும்பத்தின வறுமையால், பல்கலைக்கழகப் படிப்பை பாதியிலேயே விட வேண்டுமோ என்று, அவர் நினைத்தார். அரசிடம் படிப்புக்காக உதவிக் கடனைக் கோரி, விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிந்து பின்பு, அவர் கொஞ்சம் பணம் கொண்டு சி அன் நகருக்கு சென்றார்.

பின்தங்கிய சிறு கிராமத்திலிருந்து, செல்வம் கொழிக்கும் நகரத்துக்கு சென்ற அவர், உயரமான கட்டிடம், அகன்ற சாலை, அதிகமான வண்டிகள், பொருட்கள் நிறைந்த கடைகள் ஆகியவற்றைக் கண்ட போது மிகவும் வியப்படைந்தார். பல்கலைக்கழகத்தின் பெரிய நூலகம், புதிய விளையாட்டு அரங்கம் முதலியவற்றைப் பார்த்து, அவர் அடைந்த மகிழ்ச்சியை அளவிட முடியாது.

அவர் அறையில் மொத்தம் நான்கு மாணவிகள் தங்கியுள்ளனர். அவரை தவிர, இதர மூன்று பேர் நகரத்திலிருந்து வருவர்கள். நல்ல பொருளாதார வசதி உள்ளவர்கள், அவர்களின் வாழ்க்கை பான் லின் லீயுடன் மிகவும் வேறுபட்டது. ஒரு முறை சாப்பாட்டிற்கு அவர்கள் செய்யும் செலவு, பான் லின் லீயின் ஒரு நாள் வாழ்க்கை செலவை விட அதிகமாகும். சனி, ஞாயிறு தினங்களில், அவர்கள் அடிக்கடி வெளியே சென்று, சேர்ந்து சாப்பிட்டு கடையில் பொருட்களை வாங்குகின்றனர். அதைக் கண்டு, பான் லின் லீக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. அவர் ஒவ்வொரு காசையும் சிக்கனப்படுத்தினால் தான், அன்றாட செலவை சமாளிக்க முடியும். உணவகத்தில் அவர் விலை மிகவும் குறைவான உணவை வாங்கினார். கடைக்கு போய் பொருட்களையும் புதிய சட்டைகளையும் வாங்குவது, அவருக்கு ஒரு கனவாகும்.

கடின உழைப்பினால் பான் லின் லீ, மாணவர்களின் வரவேற்பைப் பெற்றார். அவர் குடும்பத்தின் நிலைமையைப் புரிந்துகொண்ட பின், மாணவர்கள் அடுத்தடுத்து உதவி அளித்தனர். பெய்ஜிங்கின் லியு லு எனும் மாணவியின் பெற்றோர், பான் லின் லீக்குப் பல புதிய சட்டைகளை வாங்கி கொடுத்தனர். ஹு சியன் சியன் என்ற மாணவி, வீட்டிலிருந்து ஒரு செல்லிட பேசியைக் கொண்டு வந்து பான் லின் லீக்கு வழங்க விரும்பினார். எமது செய்தியாளரிடம் ஹு சியன் சியன் கூறியதாவது:

பான் லின் லீயின் பொருளாதார நிலைமை நன்றாக இல்லை. ஒரே அறையில் வசிக்கும், அவருக்கு சில உதவிகளை அளிப்பது, இயல்பாக இருக்கிறது. என் வீட்டில் இருந்த ஒரு செல்லிட பேசியை அவருக்கு வழங்க விரும்பினேன். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ள வில்லை. அவர் சுயமரியாதை மிக்கவர். மற்றவர்களின் உதவியை ஏற்றுக்கொள்ள விரும்ப மாட்டார் என்றார் ஹு சியன் சியன்.

உளமார்ந்த உதவிகளை, பான் லின் லீ அடிக்கடி மறுத்தார். தனது வாழ்க்கை பிரச்சினையை தானே தீர்க்க வேண்டுமென அவர் கருதினார். இதனால், அவர் வேலை வாய்ப்பைத் தேடினார். ஒரு நாள், வீட்டு ஆசிரியர் வேலை பற்றிய விளம்பரத்தைக் கண்டு, அவர் உடனடியாக தொடர்பு கொண்டார். பின்பு, துவக்க பள்ளியின் நான்காவது வகுப்பு மாணவிக்கு வீட்டு ஆசிரியராக பணிபுரிந்தார்.

தவிர, தமது ஆசிரியரின் பரிந்துரையால், ஆசிரியர் அலுவலகத்தில் தகவல்களை ஒழுங்குப்படுத்துவதற்கு உதவும் வாய்ப்பை பான் லின் லீ பெற்றார். இந்த வேலையின் ஊதியம் அதிகமாக இல்லை என்றாலும், அவரின் வாழ்க்கை பிரச்சினை தெளிவாக குறைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை நிலைமை மேம்பட்ட பின்பு, எதிர்காலத்தின் பல்கலைக்கழக படிப்பு பற்றி, அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:

எத்தகைய குடும்பம், நான் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், குடும்பத்தின் ஏழை நிலைமையை மாற்ற முடியும். முயற்சி செய்வதால் தான், படிப்பிலும் வாழ்விலும் பிற மாணவர்களைப் பின்பற்ற முடியும் என நம்புகின்றேன் என்றார் அவர்.

மாணவர்கள் வழங்கிய அன்பையும் உதவியையும் பான் லின் லீ மிகவும் நன்றியுடன் நினைக்கின்றார். இவ்வாண்டின் குளிர்கால விடுமுறைக்குப் பின், அவர் பேரீச்சம் பழத்தையும், ஆப்பிளைலையும் வீட்டிலிருந்து கொண்டு வந்தார். இந்தத் தூய்மையான உணவு பொருட்கள், மாணவர்களிடையே வரவேற்பு பெற்றன. இதைக் கண்டு, பான் லின் லீ மகிழ்ச்சியடைந்தார்.