• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-12 14:41:35    
இதயத்துக்கு துணைப் புரியும் சிரிப்பு பயிற்சி

cri

நாள்தோறும் வாய்விட்டு தாராளமாக சிரிக்க வேண்டும். இப்படி சிரித்தால் இதயத்துக்கு நல்லது. ஏனென்றால் சிரிப்பு, உடல் பயிற்சி போல் ரத்த குழாய் மேலும் பயன் தரும் முறையில் இயங்குவதற்கு உதவும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சிரிப்புக்கு மாறாக மன சோர்வு வந்தால் இதய உறுப்பு பலவீனமாகும் ஆபத்தை அதிகரிக்கும். மனோ பலம் இல்லாது போனால் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று இன்னொரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புஃளோரிடா மாநிலத்தின் ஒர்ண்டோவில் அமைந்துள்ள இதய நோய் ஆய்வகத்தின் ஆண்டு கூட்டத்தில் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை அறிவித்தனர். உடல் பயிற்சி சயயாமல் சிரிக்க வேண்டும் என்று இதற்கு பொருள் இல்லை. வாரத்துக்கு மூன்று முறை கட்டற்ற முறையில் சிரிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் 30 நிமிடம் நாளுக்கு 15 நிமிடம் என்றவிகிதத்தில் சிரித்தால் இதய ரத்தக் குழாய் தொகுதிக்கு நன்மை தரும் என்று மாலிலான் பல்கலைக்கழகத்தின் மருத்துவவியல் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மெக் மீரெ கூறினார். இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்ட 20 தொண்டர்களுக்கு மிரே என்பவரும் அவர்தம் சக பணியாளர்களும் இரண்டு வகை திரைப்படங்களை காண்பித்தனர்.

ஒரு பகுதியினருக்கு சிரிக்கக் கூடிய திரைப்படத்தையும், இன்னொரு பகுதியினருக்கும் மன சோர்வு தரும் திரைப்படத்தையும் காண்பித்தனர். தொண்டர்கள் திரைப்படத்தை கண்ட பின் அவர்களின் ரத்த குழாய் இயங்கும் திறனை அளவீடு செய்தனர். தாராளமாக சிரித்தவரின் உடம்பில் ரத்தம் ஓடும் அளவு சராசரியாக 22 விழுக்காடு அதிகரித்தது. மனம் கட்டுப்படுத்தப்பட்டவரின் உடம்பில் ரத்தம் ஓடும் அளவு சராசரியாக 35 விழுக்காடு குறைந்தது. ரத்த குழாய் சுவரில் கண்டுபிடித்த முக்கிய மாற்றம் ஆக்சிஜின் இயக்கம் விளையும் நன்மைக்குச் சமமாகும். உடல் பயிற்சி விளையும் தசை நெருக்கடி தோற்றம் போன்ற நிலைமையை கண்டுபிடிக்க வில்லை என்று மீரே குறிப்பிட்டார். இதை தவிரவும், துக் பல்கலைக்கழகத்தின் ஜியான் வெய் என்பவரும் அவருடைய சக பணியாளர்களும் 1005 இதய பலவீனமானர்களை பின்பற்றி மன சோர்வு அவர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை ஆராய்ந்தனர். லேசான மனச் சோர்வுக்கு ஆளாக்கப்பட்ட நோயாளிகள் மரணமடையும் ஆபத்து 44 விழுக்காடு அதிகரிக்கும் என்று ஜியான் வெய் ஆண்டு கூட்டத்தில் குறிப்பிட்டார். இதற்கான காரணம் பற்றி கண்டறியவில்லை. மன கசப்புக்குள்ளாக்கப்பட்ட நோயாளிகள் உடல் பயிற்சியில் கலந்து கொள்ள மாட்டார்கள். நாள்தோறும் ஒழுங்கான முறையில் மருந்து சாப்பிட மாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர் என்று ஜியான் வெய் கூட்டத்தில் குறிப்பிட்டார். சிரிப்பு, உடல் பயிற்சி போல மனிதருக்கு நன்மை தரும். இதை தவிரவும் ஆக்சிஜின் உடல் பயிற்சி மூலம் மன சோர்வு நிலைமையை பெரிதும் குறைக்கலாம். எந்நேரத்திலும் உடல் பயிற்ச்சியில் ஈடுபட்டால் எந்த மன நிலைமையும் சிறப்பாகின்றது என்று அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தென் மேற்கு மருத்துவ மையத்தில் பணிபுரிகின்ற டாக்டர் திரிவேதி கூறியுள்ளார். அவருடைய கருத்தை உறுதிப்படும் வகையில் 20 முதல் 45 வயதான மன கசப்புக்கு ஆளான 20 பேரை குழுப் பிரிவில் தேர்வு செய்து சோதனையிட்டனர். அவர்களில் சிலர் மிதி வண்டி மூலம் ஆக்சிஜின் பயிற்சியில் ஈடுப்பட வேண்டும். சிலர் மிதமான உடல் பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதில் ஈடுபடும் போது மருந்து சாப்பிட வில்லை.

3 திங்கள் கழிந்த பின் வாரத்துக்கு 3 முதல் 5 வரை ஒவ்வொரு முறை 30 நிமிடம் உடல் பயிற்சியில் ஈடுபட்ட பின் மன சோர்வுக்கு ஆளான நோயாளிகளின் மனக்கசப்பு உணர்ச்சி குறைந்து விட்டது. உடல் பயிற்சியில் கூடுதலாக கலந்து கொண்டால் மனக்கசப்பு உணர்ச்சி குறையும் என்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மகிழ்ச்சிகரமான உணர்ச்சியை நிலை நிறுத்துவது மட்டுமல்ல உணவு உண்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். சரியான முறையில் உணவு உட்கொண்டால் உடம்புக்கு நன்மை தரும். தலைவலி குறையும். எடுத்துக்காட்டாக ஜாக்ரிட்டர் மதுவுடன் கூடிய பானம் ஆகியவை தலைவலி ஏற்படுவதற்கான காரணமாகும். கொகாயின் முதலியவை மனித உடலில் உட்கொள்ளப்பட்ட பின் தலைப் பகுதியிலுள்ள ரத்த குழாய் சுருஙுகுவதை துரிதப்படுத்தும். சிலருக்கு அப்போது தலைவலிக்கும். காரணம் லோஆனை நீக்கும் என்சாய்ம் குறைவு. லோஆன் அவர்களின் உடம்பில் நீண்டகாலமாக தங்கியிருந்தால் அதன் பாதிப்பு வலிமை குறைந்து தலைவலி ஏற்படும். இதை தவிர்ப்பதற்கு மாக்னைசட், வைட்டமின் பி நிறைந்த உணவு பொருட்கள் உட்கொண்டால் தலைப் பகுதியிலுள்ள வலி குறையும். அவ்வபோது தலைவலிக்கும் மகளிருக்கு வைட்டமின் பி கூடுதலாக உட்கொண்டால் நல்லது.