• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-13 15:28:26    
முட்டை தக்காளி வறுவல்

cri
பெய்ஜிங்கிலுள்ள இந்தியன் கிச்சன், வகையான இந்திய உணவுகளை சமைக்கும் அருமையான உணவகம். இந்தியன் கிச்சன் மேலாளர் சதீஷ், சென்னையைச் சேர்ந்தவர். அவருக்கு சீன உணவு வகைகளையும் சமைக்கத் தெரியும். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியை வித்தியாசமானதாக ஆக்கிட வாருங்கள் நேயர்களே, இந்தியன் கிச்சன் செல்வோம்.

அடுத்து, முட்டையும் தக்காளியும் கலந்து சமைக்கப்படுவது சதீஷ் சொல்வார்.

சதீஷ்—முட்டையும் தக்காளியும் கலந்து சமைக்கப்படுவது. இது சீனாவில் பரவலாக விரும்பி உண்ணப்படுவது. காரம் இல்லாதது. சாப்பாட்டுடனும் கலந்து சாப்பிடலாம்.

ராஜா—இதற்கு என்ன பொருட்கள் தேவை?

சதீஷ்—மூன்று பேர்களுக்கு தேவையான அளவு சமைக்க தக்காளி அரை கிலோ, 3 முட்டைகள், கொஞ்சம் சோள மாவு, வெங்காயத்தான்(அதாவது தண்டு நுனியில் மெல்லியதாக இருப்பது). இஞ்சி, உப்பு.

ராஜா—இதை எப்படி சமைப்பது?

சதீஷ்—3 முட்டைகளை முதலில் மொரித்து எடுத்துக் கொள்ளணும். பெரிய பெரிய துண்டுகளாக இருக்கட்டும். பொடிமாஸ் போல செய்துவிடக் கூடாது. அதன் மேலே லேசாக உப்புத் தூவணும். சீன உணவில் பொதுவாக உப்பும், எண்ணெயும் குறைவாகத்தான் பயன்படுத்தப்படும். கடாயில் எண்ணெய் விட்டு, தக்காளி துண்டுகளை போட்டு, கூடவே பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்களையும், இஞ்சியையும் சேர்த்து வதக்கணும். நன்கு வதங்கிய பிறகு, முட்டைத் துண்டுகளைச் சேர்த்து கிளற வேண்டும். இதை அப்படியே சாதத்தில் போட்டு பிசைந்து குழம்பாகச் சாப்பிடலாம். அல்லது இதிலே தண்ணீர் விட்டு கொதிக்க விட்டால் சூப்பாகிவிடும்.

ராஜா—இது நம்ம கேன்டீனில் கூட கிடைக்கிறது. இதை பஃன்சியே பஃன் என்பார்கள்.

சதீஷ்—சீனாவில் எல்லா இடங்களிலும் இந்த உணவு கிடைக்கிறது. இதில் தூரம் குறைவு. எண்ணெயும் குறைவு. இப்படிப்பட்ட உணவைத்தான். சீன மக்கள் விரும்புகின்றனர்.

ராஜா—உணவு மூலம் ஒரு நட்புப்பாலம் போட்டு விட்டீர்கள். நன்றி.

சதீஷ்—ஏதோ, எங்களால் இயன்றது.