சீராக இயங்கும் சீன நாணயத்துறை
cri
ஏப்ரல் திங்களில், சீனாவின் நாணய மதிப்பு ஒரே சீராக இருந்தது என்று சீன மத்திய வங்கி இன்று கூறியுள்ளது. இதற்கிடையில், ரெ மின் பிங்கின் மாற்று விகிதம் உறுதியாக ஒருநிலையில் உள்ளது. ஏப்ரல் திங்களின் இறுதியில் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 8.2765 யுவான் ரெ மின் பிங்யாக இருந்தது. தவிர, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, ஏப்ரல் திங்களில், சீனாவில், நாணய விநியோகம், ரெ மின் பிங் அடிப்படையில் பல்வேறு கடன்கள், மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பண சேமிப்பு ஆகியவை, சீராக அதிகரித்துள்ளன.
|
|