
9வது சூடிமன் கோப்பைக்கான உலக பூப்பந்து கலப்பு குழுப் போட்டி மே திங்கள் 10ஆம் நாள் பெய்சிங் மாநகரில் துவங்கியது. உலகின் 41 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அணிகள் கலந்துகொள்கின்றன. போட்டி 5 நிலைகளில் நடைபெறுகின்றது. சீனா உள்ளிட்ட முதலாவது நிலையில் இடம்பெறும் 8 அணிகள் இப்போட்டியின் சாம்பியன் பட்டத்துக்காக போட்டியிடுகின்றன.

சர்வதேச தடகள சம்மேளனம் ஏற்பாடு செய்த போட்டியின் ஜப்பானிய சுற்று மே 7ஆம் நாள் நடைபெற்றது. ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீரர் லியூ சியாங் ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில்13.12 வினாடியில் தூரத்தை ஓடி முடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். அத்துடன் இந்த போட்டி பருவத்தில், இந்த நிகழ்ச்சியின் உலக சிறந்த சாதனையை உருவாக்கினார். மகளிருக்கான இரும்பு கம்பிக் குண்டு வீசுதல் போட்டியில் சீன வீராங்கனை சாங் வென் சியூ 72.34 மீட்டர் என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார்.

ரபாட் மகளிர் டென்னிஸ் ஒப்பன் போட்டி மே திங்கள் 8ஆம் நாள் மொராக்கோவில் நிறைவடைந்தது. ஒற்றையர் போட்டியில் சீன வீராங்கனை செங் ச்சியே 0-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் வீராங்கனை NURIA VIVES இடம் தோல்வி கண்டு இரண்டாம் இடம் பெற்றார்.
வாள் வீச்சு போட்டி 2005ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான மகளிர் வாள் வீச்சு போட்டியின் வியட்நாம் சுற்று, மே திங்கள் 8ஆம் நாள் நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் சீன அணி 43-35 என்ற புள்ளிக்கணக்கில் சீன ஹாங்காங் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. சீனா, சீன ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகியவற்றைச் சேர்ந்த 20 விளையாட்டு வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். 7ஆம் நாள் நடைபெற்ற தனியார் போட்டியில், சீன வீராங்கனை தான் சியுயே முதலிடம் பெற்றார். அவருடைய அணி தோழியரான ஹுவாங் ஹையாங் இரண்டாம் இடம் பெற்றார்.
|