
நீர் குதிப்பு 2005ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீச்சல் சம்மேளனத்தின் நீர்குதிப்பு போட்டியின் கனடா சுற்று, மே திங்கள் 8ஆம் நாள் நிறைவடைந்தது. சீன நீர்குதிப்பு அணி மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றது. மகளிருக்கான மூன்று மீட்டர் பாய்ச்சல் பலகை இரட்டையர் போட்டியில் சீனாவின் புகழ் பெற்ற வீராங்கனைகள் கோ சிங் சிங், லீ திங் ஜோடி 320.10 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. இதே நாள் நடைபெற்ற ஆடவருக்கான மூன்று மீட்டர் பாய்ச்சல் பலகை இரட்டையர் போட்டியில் சீன வீரர்களான ஹொ ச்சுங், வாங் பெங் ஜோடி368.34 புள்ளிகள் என்ற மொத்த சாதனையுடன் தங்கப் பதக்கம் பெற்றது. இவ்வாறு, இந்த போட்டியின் மொத்தம் 8 நிகழ்ச்சிகளில் 6 தங்கப் பதக்கங்களை சீன அணி பெற்றுள்ளது.
கூடைப் பந்து சீன மகளிர் கூடைப் பந்து அணி, மே திங்கள் 7ஆம் நாள் அமெரிக்காவின் சக்லாமென்டோவில் 79-103 என்ற புள்ளிக்கணக்கில் WNBA இன் வலுவான அணியான SACRAMENTO MONARCHS அணியிடம் தோல்வி கண்டது. சற்று முன்னதாக WNBA வில் சேர்ந்துள்ள சீன விளையாட்டு வீராங்கனைகளான மியோ லி ஜெ சுய் பெய்பெய் முறையே 12 புள்ளிகளையும் 7புள்ளிகளையும் தமது அணிக்கு பெற்று தந்தனர். 14ஆம் நாள் சீன அணி, WNBAவின் SAN ANTONIO SILVER STARS அணியுடன் போட்டியிடும்.
கால் பந்து சீனாவில் 2005ஆம் ஆண்டுக்கான மகளிர் கால்பந்து போட்டி, மே திங்கள் 7ஆம் நாள் பிற்பகல் தியன்சின் மாநகரில் துவங்கியது. முதலாவது ஆட்டத்தில் தியன்ச்சின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஹொப்பெய் மாநில அணியைத் தோற்கடித்தது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்துகொள்கின்றன. இப்போட்டி 3 கட்டங்களில் நடைபெறுகின்றது. முதலாவது கட்டப்போட்டி மே திங்கள் 7ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை தியன்சின் மாநகரில் நடைபெறுகின்றது. இரண்டாம், மூன்றாம் கட்டப் போட்டிகள் நடைபெறும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்பவில்லை.

மே திங்கள் 8ஆம் நாள் NBAவின் பருவக்குப் பிந்திய முதல் சுற்றுப் போட்டியில், சீன வீரர் யோமிங் சேவை புரியும் HOUSTON ROCKETS அணி 76-116 என்ற புள்ளிக் கணக்கில் DALLAS MAVERICKS அணியிடம் தோல்வி கண்டது. இதனால், 3-4 என்ற மொத்த சாதனையுடன் தோல்வி கண்டு, மேற்கு பகுதியின் அரை இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறவில்லை.
|