• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-16 14:56:09    
நேயர் பிரப்பாகரன் எழுதிய கடிதங்கள்

cri
ரா-------வணக்கம் நேயர்களே. நேயர் நேரம் பகுதிக்கு உங்கள் அனைவரையும் சகோதரி விஜயலட்சுமியுடன் சேரந்து வரவேற்பவர் ராஜாராம் நேயர்களே. பொதுவாக இனிப்பு கொடுத்து வரவேற்பது நமது பண்பாடு. இன்றைய நேயர் நேரத்திற்கு இனிப்புக்குப் பதிலாக ஒரு இனிப்பான செய்தி சொல்லி உங்களை வரவேற்கிறார். விஜயலட்சுமி வி--------நேயர்களே. இனிமையான மகிழ்ச்சியான ஒரு செய்தியை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் மோகிறேன். ஏப்ரல் திங்கள் 21ம் நாள் முதல் 23ம் நாள் வரை சீன வானொலி நிலையத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டேன் உலக நேயர்கள் பற்றி அந்த கூட்டத்தில் மதிப்பிடப்பட்டது. 2004ம் ஆண்டில் நேயர் கடித எண்ணிக்கையில் தமிழ் ஒலிபரப்புக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. சீன வானொலி நிலையத்தலைவர்கள் தமிழ்ப் பிரிவுக்கு முதல் பரிசு வழங்கினார்கள். கடந்த ஆண்டில் சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்கு வந்த கடிதங்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரம் இந்தச் சாதனைக்கு காரணம் நேயர்களின் அன்புதான் நேயர்கள் அனைவருக்கும் தமிழ் ஒலிபரப்பு பணியாளர்கள் சார்ப்பில் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ரா-------நேயர்கள் காட்டும் அக்கறையும் ஆதரவும் எங்களுக்கு ஊக்கம் தருகிறது. மேலும் தருமான நிகழ்ச்சிகளை எங்களால் தயாரிக்க முடியும் என்று நம்புகிறோம். வி------சரி, ராஜா. இன்றை கடிதங்களைப் பார்க்கலாமா. ரா------கருப்படி நேயர் கே பிரபாகன் அனுப்பியுள்ள மின்னஞ்சல் அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் விஞ்ஞானி ஆல்மர்ட் ஐன்ஸ்டீன் பற்றிய நிகழ்ச்சி உண்மையிலேயே அருமை. அந்த நிகழ்ச்சி மூலம் பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. எதிர்காலத்திலும் இது போன்ற நிகழ்ச்சிகலையே எதிர்பார்க்கிறோம். ஐன்ஸ்டீன் பற்றிய ஒரு கதை நினைவுக்கு வருகிறது என்கிறார் பிரபாகரன். வி---------அப்படியா, கடிதத்துக்கு உள்ளே ஒரு கதைமா. ரா--------ஒரு முறை ஐன்ஸ்டீன் ஒரு பெண் பூனை வளர்த்தார். அதை மிகவும் நேசித்தார். ஆகிவே அதற்காக மரத்தால் ஒரு சிறு கூண்டு கட்டி அதில் பூனை வெளியே போகவும், உள்ளே நுழையவும் ஒரு ஓட்டை போட்டார். சில நாட்கள் கழித்து அந்தப் பெண்முனை கருத்தரித்து ஒரு ஆண் குட்டியை ஈன்றது. பூனைக்குட்டி வீட்டிக்கு வந்ததில விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, குட்டிப் பூனைக்காக மரக் கூண்டில் பெரிய ஓட்டைக்கு அருகே ஒரு சிறு ஓட்டை போட்டார். ஏற்கனவே ஒரு ஓட்டை இருக்கும் போது இரண்டாவது ஓட்டை எதற்காக என்று அவருடைய மனைவி கேட்டார். பெரிய ஓட்டை அம்மா பூனைக்கு, சிறிய ஓட்டை குட்டி பூனைக்கு என்று பதில் சொன்னார். இதைக் கேட்டதும் மனைவி விடுந்து விழுந்து சிரித்தார். அம்மா பூனை நுழையக் கூடிய பெரிய ஓட்டை வழியே குட்டிப்பழனையும் நுழையலாமே. தனியாக ஒரு ஓட்டை எதற்கு. பெரிய பெரிய விஞ்ஞாணிகள் கூட சமயத்தில் சிறுதவறு செய்து விடுகிறார்கள் என்கிறார் பிரபாகரன்.