• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-17 14:24:49    
பொன் தங்கவேலனின் கருத்துகள்

cri
வி--------யானைக்கும் அடிசறுக்கும் இல்லையா, சரி அடுத்த கடிதம். ரா-------திரு வண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள சங்காயாங்ச்சி தமிழ் நேயர் மன்றத்தின் பொன் தங்கவேலன் ஒரு குட்டி அகராதி தயாரித்திரும்பதாக மின்னஞ்சலில் கூறுகிறார். நாம் அனுப்பிய கைனாடுடே வார இதழ் மற்றும் தமிழ் மூல சீனம் குறிப்பேட்டை வைத்து ஒப்பிட்டு 60 சீனச் சொற்கள் அடங்கிய குட்டி அகராதியைத் தயாரித் திருப்பதாகக் கூறுகிறார். அகராதியில் சீன வார்த்தைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொருள் தரப்பட்டுள்ளது என்கிறார். வி-------நேயர்ரின் தொகுப்பு முயற்சியை பாராட்டுகிறோம். ஆர்வத்துக்கும் அக்கறைக்கும் நன்றி. ரா-------பாடங்கள் சொலிலிக் கொடுப்பது மட்டுமல்லாமல், சில நல்ல ஆலோசனைகளை வழங்குவதன் மூலம், தமிழ் மூல சீனம் நிகழ்ச்சியைக் கேட்பதில் ஆர்வம் அதிகரிக்கிறது என்று பாராட்டியுள்ளார். புதுவை நேயர் என் பாலகுமார் மேலும் மதுரை கைத்தறி நகர் நேயர் ஜே டி ஆனந்தன் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியை வாரத்திற்கு 3 முறைாயாகக் குறைத்து நேயர் நேரம் நிகழ்ச்சியை வாரத்திற்கு இரண்டுமுறையாக அதிகரிக்கலாமே என்று யோசனை கூறியுள்ளார். வி------பாராட்டுக்களுக்கும் யோசனைக்கும் நன்றி, யோசனையை கவனத்தில் கொள்கிறோம். சரி அடுத்த கடிதம். ரா--------அமெரிக்காவில் இருந்து ஆஸ்மர்ட் அனுப்பிய மின்னஞ்சல். சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு குறித்த செய்திகளை தங்களஇன் வலைத்தளப் பக்கம் மூலம் மிக நன்றாக வாசிக்க முடிகிறது. தமிழ் நாட்டிலிருந்து ஒலிபரப்பாகும் சென்னை உட்பட எந்த வானொலி நிலையமும் செய்ய முன்வராத சேவையை நீங்கள் சீனாவில் செய்கிறீர்கள், சீன உணவரங்கம் போன்ற செய்திகள் பால்பாயாசத்தில் ஏலக்காய் தூவியது போல மணக்கிறது. ரியல் ஆடியோவில் பிற செய்திகளை கேட்க முடிந்த என்னால் தங்களின் நிகழ்ச்சிகளை கேட்க என்னால் இயலவில்லை. நெட் ஒர்க் பிராப்ளம் என்று வருகிறது. வின்டோஸ் மீடியா பிளேயரின் இந்தபிரச்சினை இல்லை. வி-------பாராட்டுக்கு நன்றி. தற்போது உலகில் பல வானொலி நிலையங்கள் தங்களுக்கென தனியாக வலைதளங்களை உருவாக்கியுள்ளன. சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை ரியல் ஆடியோவில் கேட்கலாம். பல நேயர்கள் கேட்டு உடனே மின்னஞ்சல் செய்கிறார்கள். ரா-------சீன வானொலி இணையம் பற்றி வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். படிக்கட்டுமா. வி--------படியுங்கள். ரா------சீன வானொலி இணையத்தை நாள்தோறும் நான் பார்வையிடுகிறேன். ஓர் இளம்பெண்ணைப் போல சீன வானொலி தமிழ் பிரிவின் இணையம் நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டும். செழுமையாகியும் வருகிறது. இந்த இணையத்தை அடிக்கடிப் பார்வையிடாத நேயர்கள் கொடுத்து வைக்காத நேயர்கள் தான். காதால் வானொலியின் கேட்கும் கட்டுரைகள் அனைத்தும் பொருத்தமான தேவையான நிழற்படங்களுடன் இணையத்தில் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இணையத்தின் சிறப்புக்கு ஓர் எடுத்துக் காட்டு கூற விரும்புகின்றேன். கடந்த வாரம் பெய்சிங் வாழ் தமிழர்கள் இணைந்து தமிழர் குழு ஒன்றை ஏற்படுத்தியதைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நமது வானொலியில் ஒலிபரப்பானது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் வெகு அழகான முறையில் இணையத்தில் கட்டுரையுடன் வைக்கப்பட்டுள்ளன. அதை நாள் கண்டு மகிழ்ந்தேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒன்றை மட்டுமே நான் சுட்டிக் காட்டுகிறேன். மற்ற கட்டுரைகளையும் நேயர்கள் இணையத்தில் பார்த்தால் அவர்கள் பரவசமாவது உறுதி. சில பிரச்சினைகளும் இணையத்தில் தெரிவிப்பேன், சரியா.