• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-20 10:57:53    
சுரேஷ்குமாரின் யோசனை

cri
வி-----------பாராட்டுக்கு நன்றி செல்வம் அவர்களே. நீங்கள் குறிப்பிட்டது போன்ற பிழைகள் வராமல் பார்த்துக் கொள்கிறோம். சரி அடுத்து, ரா--------மதுரை செல்லூர் நேயர் என் சீனிவாசன் பெய்ச்சிங் மாநகரில் தமிழர் குழு ஏற்படுத்தி புத்தாண்டு கொண்டாடியது பற்றி சிறப்பு நிகழ்ச்சி கேட்டு மகிழல்ந்தோம். நிகழ்ச்சியை தொகுத்த ராஜாராம் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலையரசிக்கும் நன்றி என்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். வி---------அந்த புத்தாண்டுக் கொண்டிட்டத்தில் சீன வானொலி முன்னால் இயக்குநர் பேராசிரியர் சுந்தரம் அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்துக் கொண்டார். பாராட்டுக்கு நன்றி. ரா---------வேலூர் மாவட்டம் ராமபாளையம் நேயர் முனுகப்பட்டு கண்ணன் சேகர் கடந்த பிப்ரவரி திங்கள் நிகழ்ச்சிகளை பாராட்டியுள்ளார். குறிப்பாக சீன விளையாட்டு வீரர்கள் விருப்பம் என்ற செய்தி தொகுப்பினை கேட்டேன். பெய்சிங் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் கால அளவு குறைந்து வரும் இந்தச் சூழலில் சீன வீரர்கள் சாதனை புரிவதற்கான பயிற்சிப் பற்றி கூறக் கேட்டேன். 2008ம் ஆண்டின் போட்டியில் சீன வீரர்கள் சாதனை புரிய வேண்டும் என தேசிய விளையாட்டுத் துரை தலைவர் பாராட்டு தெரிவித்தது அருமை. வி----------பாராட்டுகளுக்கு நன்றி. உங்கள் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வீண்டுபோகாது. சீன விளையாட்டு வீரர்கள் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை மடைப் பார்கள். ரா-----------ஈரோடு மாவட்டம் எஸ் கே பாப்பம்பாளையம் நேயர் பி டி சுரேஷ்குமார், கடந்த ஜனவரி 28 அன்று உங்கள் குரல் நிகழ்ச்சியில் இராமையன்பட்டி நேயர் சீ பாரதி அவர்களின் கருத்தைக் கேட்டு ஆமோதித்து எழுதியுள்ளார். வி--------பாராட்டுக்கு நன்றி. நீங்கள் கூறிய கருத்தை கவனத்தில் கொள்கிறோம். ரா-------வளவனூர் கே சிவக்குமார் கடந்த ஜனவரி 13 அன்று அறிவயில் உலகம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான நீர்ச்சலுக்கு பூச்சி என்ற கட்டுரையைப் பாராட்டியுள்ளார். வி--------பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து அறிவியல் விந்தைகள் அடுத்தடுத்து ஒலிபரப்பாகும் ரா--------விழுப்பரம் மாவட்டம் சின்னபாடி சமுத்திரம் நேயர் கே நாகப்பன் நமது நிகழ்ச்சிகளை ஈடுபாட்டுடன் கேட்டு வருவதாக எழுதியுள்ளார். வி--------ஈடுபாட்டுக்கும் அக்கறைக்கும் நன்றி.