• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-19 13:54:14    
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ன

cri
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை செயலாளர் சான் தெ குவான் ஏப்ரல் 21ம் நாள் தென் கிழக்காசிய நாடுகள் அமைப்பின் தலைமை செயலாளர் வுவான் சின் யுன்னுடன் ஜாக்கர்த்தாவில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எந்த வகையானது அதன் உறுப்பினர்கள் யார் என்று சீனாவின் சுச்சுவான் மாநிலத்தின் சன் துங் நேயர் லியூ தோ கேட்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முந்திய பெயர் ஷாங்காய் ஐந்து நாடுகளின் பேச்சுவார்த்தை அமைப்பு என்பதாகும். 1996ம் ஆண்டு ஏப்ரல் 26ம் நாள் சீனா, ரஷியா, கசாகிஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளின் அதிபர்கள் ஷாங்காயில் சந்தித்து முதலாவது பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஷாங்காய் ஐந்து நாடுகள் பேச்சுவார்த்தை அமைப்பு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. 2001ம் ஆண்டு ஜுன் திங்கள் உஸ்பெக்ஸ்தான் முழுமையான சமத்துவம் என்ற அடிப்படையில் ஷாங்காய் ஐந்து நாடுகள் பேச்சுவார்த்தை அமைப்பில் சேர்ந்த பின் ஆறு நாடுகளின் அதிபர்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்க அறிக்கையில் கையொப்பமிடவே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. அதன் செயலகம் பெய்ஜிங்கில் அமைந்துள்ளது. ரஷியாக்கான சீன முன்னாள் தூதர் சான் தெ குவான் நடப்பு தலைமை செயலாளராக பணி புரிகிறார். அவருடைய பணிக் காலம் 3 ஆண்டுகளாகும். 2003ம் ஆண்டு நவெம்பர் திங்கள் அவர் இந்த பணியைத் துவக்கினார்.

உறுப்பு நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையையும் அண்டை நாட்டு நட்புறவையும் வலுப்படுத்துவது, அரசியல் பொருளாதாரம் வர்த்தகம், அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு, கல்வி, எரியாற்றல், போக்குவரத்து, சுற்று சூழல் பாதுகாப்பு முதலிய துறைகளில் பயன் மிக்க ஒத்துழைப்பை வளர்க்குமாறு உறுப்பு நாடுகளை ஊக்குவிப்பது வட்டார அமைதி, சமாதானம், உறுதிப்பாடு நிதானம் ஆகியவற்றை பேணிக்காக்க உத்தரவாதம் அளிப்பது ஜனநாயம் நீதி நியாயமான புதிய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கை நிறுவுவது ஆகியவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நோக்கமாகும்.

ஆண்டுக்கு ஒரு முறை உச்சி மாநாட்டை அந்த அமைப்பு நடத்துகின்றது. தலைமை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டை நடத்துகின்றது. மாறி மாறி பல்வேறு நாடுகள் இவற்றுக்கு ஏற்பாடு செய்கின்றன.

2001ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் 13, 14 தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைமை அமைச்சர்கள் அல்மா ஆட்டாவில் முதலாவது பேச்சுவார்த்தை நடத்தினர். பங்கேற்ற ஆறு நாடுகளின் தலைமை அமைச்சர்கள் பல தரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை துவக்குவதெனத் தீர்மானித்தனர். உறுப்பு நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையில் பல தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை நடத்துவதன் அடிப்படை குறிகோள் மற்றும் இலக்கு குறிப்பாணையிலும் வர்த்தக மற்றும் முதலீட்டு வசதிமயமாக்க மேம்பாட்டு குறிப்பாணையிலும் தலைமை அமைச்சர்கள் கையொப்பமிட்டுள்ளனர். தலைமை அமைச்சர் மற்றும் பொருளாதார வர்த்தக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் முறைமை பற்றி அதிகாரப்பூர்வமாக அவர்கள் அறிவித்தனர். அத்துடன் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைமை அமைச்சர்களின் முதலாவது சந்திப்பு தொடர்பான பிரகடனம் வெளியிடப்பட்டது.