• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-20 08:06:08    
தேசிய இனப் பிரதேச வளர்ச்சியில் அக்கறை

cri

Jing இன மகளிர்

சீனாவில் மொத்தம் 56 தேசிய இனங்கள் இருக்கின்றன. முக்கிய இனமான ஹான் இனம் தவிர, இதர 55 தேசிய இனங்கள் "சிறுபான்மை தேசிய இனம்" என அழைக்கப்படுகின்றன. அவற்றின் மக்கள் தொகை, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 9 விழுக்காடாகும். அண்மையில் நிறைவுற்ற, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக்கமிட்டியின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட 2200க்கும் அதிகமான உறுப்பினர்களில் சிறுபான்மை தேசிய இன உறுப்பினர்களின் எண்ணிக்கை, 250ஐத் தாண்டியது. சிறுபான்மை தேசிய இனத்தின் வளர்ச்சி பற்றியும், சிறுபான்மை தேசிய இன உறுப்பினர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முன்மொழிவு தெரிவித்து அரசு விவகாரங்களில் கலந்து கொள்வது பற்றியும் கூறுமாறு எமது செய்தியாளர் அவர்களில் சிலரைக்கேட்டுக்கொண்டார்.

Lin Xing என்பவர், ஒரே ஒரு Jing இன உறுப்பினராவார். Jing என்ற இனம், சீன மக்கள் தொகையில் மிகவும் குறைவான எண்ணிக்கையுடைய சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றாகும். அதன் மொத்த மக்கள் தொகை, 20 ஆயிரத்துக்குட்பட்டதாகும். முக்கியமாக, அவர்கள் சீனாவின் சீன-வியட்நாம் எல்லைப்பிரதேசத்தில் வாழ்கின்றனர். முன்பு, Jing இனம் முக்கியமாக மூன்று சிறிய தீவுகளில் வசித்தது. அவர்கள், கடலில் ஆழமற்ற பகுதியில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்தினர். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், அங்கு Jing இன தன்னாட்சி சோ அமைக்கப்பட்டது. அரசின் நிதியுதவியுடன் அணைக்கட்டி கடலை வயலாக மாற்றி வேளாண் தொழில் நடத்தப்படுகிறது. இதனால், Jing இன பிரதேசம், சீனாவில் தனிநபர் வருமானம் மிக அதிகமான சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களில் ஒன்றாக இருக்க முடிந்தது.

Jing இன மகளிர்

Jing இனத்தின் ஒரே ஒரு அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தேசிய கமிட்டி உறுப்பினர் என்ற முறையில், ஒவ்வொரு ஆண்டும் கூட்டத்தொடரின் துவக்கத்துக்கு முன், அவர் பெருமளவில் கள ஆய்வு மேற்கொண்டு இதில் பல கருத்துருக்களை முன்வைப்பார். இவ்வாண்டு அவர் 4 கருத்துருக்களைத் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரதேச பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய இனப் பண்பாட்டு பாரம்பரியத்தின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கை மேம்பாடு ஆகியவற்றுடன், Jing இனத்தவர், சொந்த இனத்தின் கல்வி மற்றும் பாரம்பரியப் பண்பாட்டின் பாதுகாப்பில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார். மக்கள் தொகை, மிகக் குறைவான சிறுபான்மை தேசிய இனங்களுக்கென, 22 அருங்காட்சியகங்கள் கட்டப்படுவதற்கு அரசு, நிதி ஒதுக்கீடு வைக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். அவர் விளக்கிக்கூறியதாவது:

"தொல்பொருள், புதுப்பிக்க முடியாத வளமாகும். சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத்திறப்புப்பணி, பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், நவீன நாகரிகம் ஆகியவற்றினால், மக்கள் தொகை குறைவான சிறுபான்மை தேசிய இனங்களின் பண்பாடு, குறிப்பாக, பண்பாட்டு மரபுச்செல்வம் நவீன வாழ்க்கையில் இணைந்துள்ளது. இப்போது அவற்றை பாதுகாக்கா விட்டால், அவை அழிந்து விடும்" என்றார் அவர்.

இந்த பாதுகாப்பு திட்டப்பணிக்கு அரசின் 20 கோடி யுவான் முதலீடு தேவைப்படுகின்றது என, அவர் மதிப்பிட்டார். பணத்தொகை அவ்வளவு அதிகம் இல்லை என்ற போதிலும், அதன் முக்கியத்தை அரசுத் துறை கவனத்தில் கொள்ளும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

1  2  3