• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-20 13:53:26    
கிராமப்புற மருத்துவவக் காப்பீட்டு முறை

cri

வணக்கம் நேயர்களே. சீனக் கிராமப்புற மருத்துவவக் காப்பீட்டு முறை பற்றி கூறுகிறோம். சீனா ஒரு பெரிய வேளாண் நாடாகும். உழவு தொழிலில் ஈடுபடும் மக்கள் தொகை 70 விழுக்காடாக உள்ளது. விவசாயிகளின் மருத்துவவ சிகிச்சை பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு சீன அரசு கடந்த 50ம் ஆண்டுகளின் இறுதியில் கிராமப்புறங்களில் ஒத்துழைப்பு மருத்துவவ சிகிச்சை எனப்படும் முறையை விரிவான முறையில் மேற்கொண்டது. பிறகு நிதி பற்றாக்குறை முதலிய காரணங்களால் இதை மிகப் பெரும்பாலான கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்த முடிய வில்லை. பயன் தரும் மருத்துவவ சிகிச்சை காப்பீட்டு முறை இல்லாமை பெரும்பாலான கிராமப்புறங்களில் மந்தமான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றால் தற்போது கிராமப்புறங்களில் மருத்துவவ சிகிச்சைக்குப் பணமில்லை என்ற நிலைமை பரவலாக நிலவுகின்றது. இதற்காக 2 ஆண்டுகளுக்கு முன் சீன அரசு ஒரு பகுதி கிராமப்புறங்களில் புதுவகையான ஒத்துழைப்பு மருத்துவவ சிகிச்சை முறையைக் கடைப்பிடிக்க துவங்கியது. இம்முறையில் பங்கெடுக்க விரும்பும் விவசாயிகள் ஆண்டுதோறும் 10 யுவான் வழங்க வேண்டும்.

அதேவேளையில் அரசு அவர்கள் ஒவ்வொருவருக்கும் 20 யுவான் உதவி தொகை வழங்கும். இப்பணத்தை ஒத்துழைப்பு மருத்துவவ சிகிச்சையின் நிதியாக கொண்டு உள்ளூர் வங்கியில் சிறப்பு கணக்கில் சேமித்து வைக்க வேண்டும். விவசாயிகள் நோய்வாய்பட்டால் குறிப்பிட்ட மருத்துவவ மனைக்குச் சென்று சிகிச்சை பெறலாம். பின் ஒத்துழைப்பு மருத்துவவ சிகிச்சை சான்று பத்திரத்தைக் கொண்டு குறிப்பிட்ட விகிதாசாரத்தின் படி ஒரு பகுதி சிகிச்சைக் கட்டணத்துக்கு உரிமை கோரலாம். விவசாயிகள் தரமிக்க சேவையைப் பெற துணை புரியும் பொருட்டு இம்முறையின் பரிசோதனை வட்டாரங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கண்டிப்பான முறையில் சீனா செயல்படுகின்றது. கொங்சு லின் நகர சுகாதார கழகத்தின் தலைவர் லி சியௌ சன் இது பற்றி கூறியதாவது

எங்கள் சுகாதார கழகத்தின் நன்கு அடிப்படை கொண்ட உயர் தொழில் நுட்பமுடைய 8 நகர் நிலை மருத்துவவ மனைகளையும் 22 பேரூர் மருத்துவவ மையங்களையும் இம்முறையின் கீழ் குறிப்பிட்ட மருத்துவவ அமைப்புகளாக தேர்ந்தெடுத்துள்ளது. பேரூர் மருத்துவவ மையங்கள் ஒதுக்குப்புறமான கிராமங்களில் மருத்துவச் சிகிச்சை தலங்களை உருவாக்கி வாரங்தோறும் இரண்டு தடவை அங்கு போய் விவசாயிகளுக்கச் சேவை செய்ய வேண்டும் என்றார் அவர்.