யாங்லிபின் என்ற நடனக்கலைஞர், சீனாவின் பாய் இனத்தைச் சேர்ந்தவர். அவர் ஆடலின் மூலம், இயற்கை காட்சிகளை உயிர்த்துடிப்புடன் சித்திரிக்கிறார்.
வசந்த காலத்தின் ஒரு பகல் நேரத்தில், செய்தியாளர் யாங்லிபினைச் சந்தித்தார். அவள் நிறமான நீள பாவாடை, மியேள, வா மற்றும் திபெத் இனத்தின் நகைகளை அணிந்திருந்தார். அவரின் நீளமான நகம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1958ம் ஆண்டு, யாங்லிபின் சீன யுவான்னான் மாநிலத்தின் தாலீ நகரத்திலுள்ள பாய் இனக்குடும்பத்தில் பிறந்தார். வாழ்க்கை வறுமையாக இருந்த போதிலும், அவரின் குழந்தை பருவ நினைவில் இன்னல் இல்லை. தாயகத்தின் நாட்டுப்புற பழக்கங்களும், பல வகையான தேசிய இன ஆடல்களும் நிறைவாக இடம் பெற்றுள்ளன. யுவான்னான், சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்கள் மிகவும் அதிகமாக வாழும் மாநிலமாகும். இங்கே, மக்களின் ஆடலும் பாடலும் செழித்தோங்கி வளர்ந்துள்ளன. இவற்றின் மூலம், தமது உணர்வை வெளிப்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். யாங்லிபின், இந்த நிலைமையில் வளர்ந்ததால், அவரின் குழந்தைப் பருவ நினைவுகள் அனைத்தும், ஆடலுடன் தொடர்பு உடையதாக உள்ளன.
யாங்லிபினின் குடும்பத்தில், நடனத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் இல்லை. யாங்லிபினைப் பொருத்த வரை, நடனம் ஆடுவது, இயல்பாகவே இருக்கிறது. அவர் கூறியதாவது:
எனக்கு நடனம் ஆடும் திறமை உண்டு. நடனம் ஆடுவது எனக்கு கடினமில்லை. எனது கருத்தையும் சிந்தனையையும் உடலுக்கு மாற்றுவது மிகவும் எளிதானது. தடையில்லை. சிந்தனைகள் விரைவாக உடலை அடைந்து, என் உடலை ஒருங்கிணைத்து இயக்குகின்றன என்றார் அவர்.
சிறந்த நடனத் திறமை இருந்ததால், 13 வயதான யாங்லிபின், சிசுவான் பான்னா ஆடல் பாடல் குழுவில் சேர்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது, அவர் ஆடல் பாடல் குழுவுடன் அடிக்கடி கிராமங்களுக்கு சென்றார். ஊதியம் குறைவு, நல்ல உணவு இல்லை இருந்த போதிலும், நாள்தோறும் கிராமத்தின் மக்களுக்காக நடனம் ஆடுவது, அவருக்கு பெரும் மகிழ்ச்சி தந்தது. அவர் மேலும் கூறியதாவது
கிராமத்தில், பையன்கள் முழு இரவிலும், பா ஊ எனும் இசைக் கருவியை இசைத்து, வெளியில் எங்களுடன் கலந்து பேசி, பாட்டு பாடுகின்றனர். அன்பு மேலிட்ட அவர்களின் உணர்வுகள் மிகவும் தூய்மையானவை என்றார் அவர்.
சிசுவான் பான்னா ஆடல் பாடல் குழுவில் யாங்லிபின், மயில் இளவரசி எனும் தேய் இனத்தின் ஆடல் நாடகத்தில் பங்கெடுத்து, படிப்படியாக புகழ்பெற்றார். இதற்கு பின், மயில், யாங்லிபினின் ஆடலின் அடையாளமாக மாறியுள்ளது. 1981ம் ஆண்டில், அவர் மத்திய தேசிய இன ஆடல் பாடல் குழுவில் சேர்ந்தார்.
|