• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-20 15:07:20    
ஆட்டிறைச்சி கலந்த சோறு

cri

ராஜா—கலைமகள், எந்த உணவு அறிமுகப்படுத்துவீர்கள்?

கலை—சீனாவின் மேற்குப்பகுதியிலுள்ள சின்சியாங் வைகூர் தன்னாட்சி பிரதேசத்தின் மக்களுக்கு விருப்பமான ஆட்டிறைச்சி கலந்த சோறு எனும் உணவு பற்றி கூறுவேன். இந்த வறுவல் குழம்பை கையால் பிசைந்து சாப்பிட வேண்டும்.

ராஜா—அப்படியா!இதைச் சமைப்பதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?சொல்லுங்கள்

கலை—சரி

ஆட்டிறைச்சி, 500 கிராம்

அரிசி, 500 கிராம்

ஒரு கேரட், ஒரு வெங்காயம்

உலர் திராட்சை அல்லது கிஸ்மிஸ், 100 கிராம்

உப்பு 10 கிராம், இஞ்சி,

சர்க்கரை 15 கிராம், கருப்பு மிளகு கொஞ்சம்

ராஜா—இதை சமைக்கும் முறை சொல்லுங்கள்

கலை—முதலில், சில ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். ஆட்டிறைச்சியை பெரிய பெரிய துண்டுக்களாக நறுக்கி, வாணலியில் வைத்து, நீரை விட்டு, வேகவிட வேண்டும். இதில் உப்பு சேர்க்க வேண்டாம், இஞ்சி கொஞ்சம் வைக்கவும். ஆட்டிறைச்சி சூப் தயாராகும் போது, அரிசி, கேரட், வெங்காயம் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கேரட், வெங்காயம் சிறிய துண்டுகளாக நறுக்கி, தட்டில் வைக்கவும்.

ராஜா—ஆட்டிறைச்சி எவ்வளவு நேரம் வேக விட வேண்டும்?

கலை—சுமார் ஒரு மணி நேரம் வேக வேண்டும். அதன் பிறகு, ஆட்டிறைச்சியை வாணலியில் இருந்து எடுத்து, சிறிய துண்டுகளாக அரிந்து தட்டில் வைக்கவும்.

ராஜா—இப்பொழுது, சோறு சமைக்கலாமா?

கலை—ஆமாம், சமைக்கலாம். வாணலியில் அரிசியை போட்டு, நீருக்குப் பதிலாக, ஆட்டிறைச்சி சூப்பை சேர்த்து, கலந்து வேக வைக்கணும். இவ்வாறு சமைக்கும் சோற்றில் ஆட்டிறைச்சி சுவை நன்றாக சேரும்.

ராஜா—அப்படியா! அப்புறம், என்ன செய்ய வேண்டும்

கலை—சோறு வெந்த பிறகு, ஆட்டிறைச்சி, கேரட், வெங்காயம், உலர் திராட்சை அல்லது கிஸ்மிஸ் ஆகியவற்றின் துண்டுகளை, சோற்றில் கலக்கவும். கொஞ்சம் உப்பு, சர்க்கரை, கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கிளற வேண்டும். கடைசியாக, இதில் கொஞ்சம் ஆட்டிறைச்சி சூப்பை மீண்டும் விட்டு, வாணலியில் வைத்து வேக விட வேண்டும். சுமார் 10 நிமிடத்துக்கு பின்பு, ருசிக்கலாம்.

ராஜா—சரி, இந்த வறுவல் சமைப்பது முடிந்ததா?

கலை—முடிந்தது.

ராஜா—இந்த வறுவலின் தயாரிப்பு முறை மிகவும் எளிதானது.

கலை—ஆமாம். நீங்கள் வீட்டில் சமைத்து சுவைத்துப் பாருங்கள். சீனாவின் மேற்கு பகுதியில், இது மிகவும் பிரபலமான உணவாகும்.

ராஜா—நான் கண்டிப்பாக சமைத்து சுவைப்பேன்.

கலை—ராஜா, நீங்கள் இந்த உணவை உண்ணும் போது, கொஞ்சம் பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால், மேலும் ருசியாக இருக்கும்.

ராஜா—சரி, இந்த வறுவல் நேயர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகின்றேன்.