• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-24 05:35:04    
சுதிர்மன் பூப்பந்து போட்டியில் சீனா வெற்றி

cri

9வது சுதிர்மன் கோப்பைக்கான உலகப் பூப்பந்து கலப்பு குழு போட்டிகள் மே திங்கள் 15ஆம் நாள் பெய்சிங்கில் நிறைவுற்றன. சீன அணி, இறுதிப் போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் இந்தோநேசிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. சீன அணி சுதிர்மன் கோப்பை வெல்வது இது 5வது தடவை. 1995ஆம் ஆண்டுமுதல் 2001ஆம் ஆண்டுவரை சீன அணி தொடர்ச்சியாக 4 முறை இந்த கோப்பைக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வள்ள ஓட்டப் பந்தயம், பாய்மரப் படகு போட்டி பெய்சிங்கின் பத்து கோடி யுவான் பணக்காரன் வாங் சௌ யுங்கும் பிரெஞ்சு LE DEFI நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய சீன வள்ள ஓட்ட அணி ACM கமிட்டியின் அனுமதியை பெற்று, 32வது அமெரிக்க கோப்பை வள்ள ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும். சீன அணி உலகில் மிக உயர்நிலை இத்தகைய போட்டியில் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டி 19வது நூற்றாண்டின் நடுப் பகுதியில் துவங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 32வது அமெரிக்க கோப்பை வள்ள ஓட்டப் போட்டியின் சுற்றுகள் 2005ஆம் ஆண்டு துவங்கும். இறுதிப் போட்டி 2007ஆம் ஆண்டு ஸ்பெயினின் துறைமுக நகரான வலேன்சியாவில் நடைபெறும்.

மே 15ஆம் நாள் முதல் 17ஆம் நாள்வரை பெய்சிங்கில் நடைபெற்ற 2005 FORTUNE சர்வதேச கருத்தரங்கில் விளையாட்டுத் துறை பற்றிய வட்ட மேசை கூட்டம் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது. உலகின் விளையாட்டுப் பொருள் தயாரிப்பு பன்னாட்டு நிறுவனம், விளையாட்டுத் துறை நிர்வாகிகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்தவர்கள் ஆகியோர், சீன விளையாட்டுத் துறையின் தொழில்முறை போட்டி நிர்வாகம், விளையாட்டுப் பொருட்களை விற்பது பற்றிய திட்டம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முன்னும் பின்னும் சந்தையை வளர்ப்பது முதலிய பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர். தற்போது, சீனாவில் ஆண்டுதோறும் விளையாட்டுப் பொருட்களின் உற்பத்தி மதிப்பு சுமார் 3000 கோடி யுவானாகும் என்று கூட்டத்தில் அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

படகு விடும் போட்டி 2005ஆம் ஆண்டு உலக போப்பைக்கான ரப்பர் படகு விடும் போட்டியின் போலந்து சுற்று மே திங்கள் 15ஆம் நாள் நிறைவடைந்தது. மகளிருக்கான 200 மீட்டர் ஒற்றையர் ரபர் படகு விடும் போட்டியில் சீன வீராங்கனை சுங் ஹுங் யன் சாம்பியன் பட்டம் பெற்றார். முன்னதாக, மகளிருக்கான 500 மீட்டர் ஒற்றையர் ரப்பர் படகு விடும் போட்டியில் அவர் சீனாவுக்கு ஒரு வெள்ளி பதக்கத்தை பெற்று தந்தார்.