
இலக்கு சுடுதல் உலக கோப்பைக்கான இலக்கு சுடுதல் போட்டியின் அமெரிக்க சுற்று 15ஆம் நாள் நிறைவடைந்தது. சீன அணி இப்போட்டியில் 4 தங்கப் பதக்கங்களைப் பெற்றது. சீன அணியின் துலி மகளிருக்கான AIR றைப்ல் சுடும் போட்டியிலும்,தான் துங்லியாங் ஆடவருக்கான கைதுப்பாக்கி சுடும் போட்டியிலும் ,சென் யிங் மகளிருக்கான கை துப்பாக்கி சுடும் போட்டியிலும்,ச்சினான் ஆடவருக்கான AIR றைப்ல் சுடும் போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
நீர் குதிப்பு சர்வதேச நீச்சல் சம்மேளனத்தின் நீர் குதிப்பு போட்டியின் அமெரிக்க சுற்று 15ஆம் நாள் நிறைவடைந்தது. கடைசி நாள் போட்டியில் சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான வூ மின் சியா மகளிருக்கான 3 மீட்டர் பாய்ச்சல் பலகை நீர் குதிப்பில் தங்கப்பதக்கம் பெற்றார். ஆடவருக்கான இரட்டையர் பத்து மீட்டர் மேடை நீர் குதிப்பு போட்டியில் சீன வீரர்களான ஹு ச்சியா, யாங் ச்சிங் ஹுய் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது.
முன்னதாக, சீன அணி, ஆடவருக்கான இரட்டையர் 3 மீட்டர் பாய்ச்சல் பலகை நீர் குதிப்பு, மகளிருக்கான இரட்டையர் 3 மீட்டர் பாய்ச்சல் பலகை நீர் குதிப்பு, மகளிருக்கான இரட்டையர் பத்து மீட்டர் மேடை நீர் குதிப்பு ஆகிய மூன்று நிகழ்ச்சிகளிலும் சாம்பியன் பட்டம் பெற்றனர். இவ்வாறு 4 நாட்கள் நடந்த இந்த போட்டியின் மொத்தம் 8 நிகழ்ச்சிகளில் சீன அணி, 5 தங்கப் பதக்கங்களை வென்றது. ரக்பி கால்பந்தாட்டம் 6வது உலக கோப்பைக்கான NFL FLAG ரக்பி கால்பந்து போட்டி ஆகஸ்ட் திங்களில் பெய்சிங்கில் நடைபெறும் என்று அமெரிக்க ரக்பி கால்பந்தாட்டக் சங்கத்தின் தலைவர் PAUL TAGLIABUE அண்மையில் அறிவித்தார். இந்த விளையாட்டு அதிக மோதல் இல்லாதது. இது போட்டித் தன்மையும் பாதுகாப்பு தன்மையும் கொண்டதால் உலகின் 30க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 6 வயது முதல் 14வயது வரையான குழந்தைகளிடையே விரிவாக பரவியுள்ளது.

லௌலன்ஸ் உலக விளையாட்டுக் கழகம் மே 16ஆம் நாள் சீனாவின் புகழ்பெற்ற தடகள வீரரான லீயூ சியாங்கிற்கு மிக சிறந்த புதிய விளையாட்டு வீரர் என்ற விருதை வழங்கியது. நான் மிகவும் மகிழ்யடைகின்றேன். இந்த பரிசு நான் கனவிலும் கூட பெற விரும்புகின்றேன். என்னை ஆதரித்து என்மீது நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்,எனது எதிர்கால விளையாட்டுத் துறையில் மேலும் அதிக வெற்றி பெற பாடுபடுவேன் என்று பரிசு பெற்ற பின் லியூ சியாங் கூறினார். 21வயதான லியூ சியாங் கடந்த ஆண்டில் நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் தடகள போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற சீனாவின் முதலாவது விளையாட்டு வீரர் அவர் ஆவார்.
|