ஜொல்மோ லுங்மா சிகரத்திலான சுத்தம்
cri
சீனாவின் திபெத் மலை ஏற்ற அணியும் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் ஈடுபடும் தொண்டர்களுமாக சுமார் 100 பேர் இடம் தூய்மை அணி இன்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் லாசாவை விட்டு ஜொல்மோ லுங்மா சிகரத்தை நோக்கி புறப்பட்டாது. சிகரத்தில் ஏறும் வழியில் 5120 மீட்டர் முதல் 8000 மீட்டர் வரையான உயர் இடத்தில் வீசப்பட்ட குப்பைகளை அவர்கள் சேகரிப்பார்கள். தற்போது பூமியில் மிக உயரமான இடத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். தூய்மை அணி 29ம் நாள் சிகரத்தில் குப்பையை சேகரிப்பார்கள். ஜுன் திங்கள் 5ம் நாளான உலக சுற்றுச் சூழல் நாளன்று சேகரிக்கப்பட்ட குப்பையை லாசாவுக்கு ஏற்றிச் செல்வர். உள்ளூர் அரசாங்கம் ஒன்றிணைந்து செயல்பட்டு மாசுபடாத முறையில் குப்பைகளைக் கையாளும் என தெரியவருகின்றது.
|
|