• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-24 13:48:58    
விவசாயிகளுக்கு சிகிச்சை அளிப்பது

cri

சியூ தைய் நகர் ஜிலின் மாநிலத்தில் இந்த புதுவகை ஒத்துழைப்பு மருத்துவவ சிகிச்சைக்கான மற்றொரு பரிசேதனை நகராகும். உள்ளூர் விவசாயிகள் உற்சாகமாக இந்த அமைப்பு முறையில் பங்கு கொண்கின்றனர். வான் சுன் லியான் என்பவர் இந்நகரின் சின் லொங் வட்டத்தின் கொய்வாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியாவர். அம்மையில் அவர் இரைப்பை நோயால் பிடிக்கப்பட்டு வட்ட மருத்துவவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர் ஒத்துழைப்பு மருத்துவவ சிகிச்சை முறையில் கலந்து கொண்ட படியால் அவர் குணமடைந்த போது மருத்துவவ மனை அவருக்கு 400 யுவான் மருத்துவவ சிகிச்சை கட்டணத்தை செலுத்தியது.

 

வான் சுன் லியான் மகிச்சியுடன் கூறுகிறார். இந்த ஒத்துழைப்பு மருத்துவவ சிகிச்சை முறை அரசு மேற்கொண்ட நல்ல காரியமாகும். மிகவும் நல்லது. பல விவசாயிகள் நோய்வாய்பட்டால் அவர்கள் பணத்துக்காக மிகவும் சிரமப்படுவர். இம்முறை 400 யுவான் கட்டணத்தை மருத்துவவ மனை எனக்காக செலுத்தியதால் இது பெரும் பிரச்சினையைத் தீர்த்து விட்டது என்றார் அவர்.

குறைவான கட்டணம் தெளிவான நலன் ஆகியவற்றின் காரணமாக தற்போது ஜிலின் மாநிலத்தைச் சேர்ந்த சியூ தைய் நகரிலுள்ள 6 லட்சத்துக்கு மேலான விவசாயிகளில் 85 விழுக்காட்டினர் இந்த புதுவகை ஒத்துழைப்பு மருத்துவவ முறையில் பங்கு கொள்கின்றனர். மருத்துவவ சிகிச்சை பெறுவதற்கு பணமில்லை என்ற நிலைமை மெல்ல மெல்ல காணாமல் போயிற்று. இந்நகரின் கிராமப்புற ஒத்துழைப்பு மருத்துவவ சிகிச்சை அலுவலகத்தின் பொருப்பாளர் சியாங் என் சின் அம்மையார் கூறியதாவது முழுமையாக பார்த்தால் எங்கள் மருத்துவவ மனைக்கு வந்து சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எடுத்துவக் காட்டாக கடந்த ஆண்டு சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை 2003ம் ஆண்டில் இருந்ததை விட 30.33 விழுக்காடு அதிகரித்துள்ளது. காரணம் முன்பு பணப் பிரச்சினையினால் விவசாயிகள் நோய்வாய்ப்ட்டால் மருத்துவவ நிலையத்துக்குச் சென்று சிகிச்சை பெற விரும்பவில்லை. இப்போது இந்த புதுவகை முறையின் மூலம் விவசாயிகள் மருத்துவவ நிலையத்துக்குச் சென்று சிகிச்சை பெற்றால் குறிப்பிட்ட உதவி தொகையைப் பெறலாம். ஆகையால் அவர்கள் சிகிச்சை பெற விரும்புகிறார்கள் என்றார் அவர்.

தற்போது ஜிலின் மாநிலத்தில் 20 லட்சம் விவசாயிகள் இம் முறையில் பங்கு ஏற்கின்றனர். ஒத்துழைப்பு மருத்துவவ சிகிச்சை நிதியம் விவசாயிகளுக்காக 2 கோடியே 10 லட்சம் யுவான் கட்டணத்தைச் செலுத்தியுள்ளது. இதனால் விவசாயிகளின் மருத்துவவ சிகிச்சை கட்டணம் குறைந்துள்ளது

ஜிலின் மாநிலம் செய்தது போன்று சீனாவின் இதர மாநிலங்களும் தமது பரிசோதனை பணியைத் துவங்கியுள்ளன. இதுவரை 300க்கும் மேற்பட்ட பரிசோதனை மாவட்டங்கள் உள்ளன. 7 கோடி விவசாயிகள் இந்த புதுவகை ஒத்துழைப்பு மருத்துவவ சிகிச்சை முறையில் பங்கு கொண்டுள்ளனர். சீனத் துணை நல வாழ்வு துறை அமைச்சர் சு சின் சன் கூறியதாவது இப்போது புதுவகை ஒத்துழைப்பு மருத்துவவ சிகிச்சை முறையின் நிர்வாகமும் செயல்படும் அமைப்பு முறையும் சீனாவில் உருவாகியுள்ளன. பரிசோதனை பிரதேசங்களிலுள்ள விவசாயிகளின் நிலைமை மேம்பட்டுள்ளது. அவர்களுடைய மருந்து செலவும் ஓரளவு குறைந்துள்ளது என்றார் அவர்.

திட்டப் படி 2010ம் ஆண்டுக்குள் இந்த புதிய முறை சீனாவின் எல்லா கிராமப்புறங்களிலும் பரும். அப்போது விவசாயிகளின் மருத்துவவ சிகிச்சை பிரச்சினை அடியோடு தீர்ந்து விடும் என்று அறிவிக்கப்பட்டது