• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-02 21:52:09    
மகௌ

cri

மாசூ தேவி, மகௌ மக்களின் உள்ளத்தில் நேர்மை, அன்பு, அமைதி, மங்களம் ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்கின்றாள். இதனால், மகௌ கோயிலில் ஆண்டு முழுவதும் வழிபாடு செய்ய மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். விழா நாட்களில், பயணிகளும் வழிபாடு செய்பவர்களும் அதிக அளவில் வருவதால், நெரிசல் அதிகமாகிறது. மாசூ மீது நம்பிக்கை கொண்டுள்ள ஏறக்குறைய அனைத்து பயணிகளும் மகௌ வந்தடைந்த பின் மகௌ கோயிலில் நறுமணப்புகை ஏற்றி வழிபட்டு வரம் வேண்டுகின்றனர். சீனாவின் ஹுபெய் மாநிலத்தைச் சேர்ந்த சாவுலான் அம்மையார் கூறியதாவது, மகௌ கோயில் பற்றி கேள்விப்பட்டேன். மீனவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதைப் பாதுகாக்கும் கோயில் இது. இதனால், நான் மகௌவு வந்த பின்பு, இங்கு சிறப்பாக வந்துபார்க்கிறேன் என்றார் அவர்.

மகௌ, சீனப் பாரம்பரிய பண்பாட்டுத் தனிச்சிறப்பு மிகுந்த நகரம் மட்டுமல்ல, வெளிநாட்டு தோற்றம் உடைய நகரமும் ஆகும். கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக, கீழை மற்றும் மேலை நாட்டுப் பண்பாடு ஒன்றிணைந்து பிரபல பண்பாட்டு மரபுச் செல்வங்கள் எஞ்சியுள்ளன. ஜெர்மனியர் UTE MEISTER அம்மையார் கூறியதாவது, மகௌவை நான் மிகவும் விரும்புகிறேன். அதற்கு அர்த்தம் மிகுந்தது. கீழை நாட்டுத் தனிச்சிறப்பு மிக்கது. அதிக ஐரோப்பிய தனிச்சிறப்பும் உண்டு என்றார் அவர்.

தாசான்பா ஓட்டுவில் வழி மகௌவில் சீன மற்றும் ஐரோப்பிய கட்டடப் பாணியையும் பண்பாட்டுப் பாணியையும் நன்கு ஒன்றிணைத்திருக்கும் பிரபலக் காட்சித் தலமாகும். சான்பா என்னும் சொலின் உச்சரிப்பு சீனாவின் குவாங்துங் மொழியில் சன்பௌலொ என்பதாகும். தாசான்பா நுழை வாயில், 17வது நூற்றாண்டில் சன்பௌலொ தேவாலயத்தின் சிதிலத்தில் கட்டியமைக்கப்பட்டது. இத்தாலி மதக்குருமார் ஒருவர், இத்தேவாலயத்தை உருவாக்கினார். அப்போதைய கீழை நாடுகளின் மிக பெரிய கத்தோலிக் கோயிலாக இது இருந்தது. 1835ல், சன்பௌலொ தேவாலயம் தீ விபத்தில் அழிந்தது. தற்போது காணப்படும் இதன் முன் பகுதி மட்டுமே மிஞ்சியது. அதன் வடிவம் சீனாவின் ஓட்டுவில் வழி போன்றது. இதனால் அதற்கு தாசான்பா ஓட்டுவில் வழி என்ற பெயர் சூடப்பட்டுள்ளது. இந்த நுழை வாயில் சுவரில் செதுக்கப்பட்ட சிற்பங்களில் மத மணம் கமழ்கின்றது.

1  2  3