பண்பாடு நிகழ்ச்சி மிக நல்லது
cri
ரா------வணக்கம் நேயர்க்களே. நேயர் நேரம் பகுதிக்கு உங்களை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்பது
வி-------விஜயலட்சுமி
ரா--------ராஜாராம்-----கடந்த 11ம் தேதி ஒலிபரப்பான நேயர்நேரம் நிகழ்ச்சிக்கு பாராட்டுக்கள் வந்துள்ளன மின்னஞ்சல் மூலமாக 2004ம் ஆண்டில் சீன வானொலியில் நேயர் கடித வரிசையில் தமிழ் ஒலிபரப்பு முதலிடம் பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து நாமக்கள் மாவட்டம் பேளுக்குறிச்சி நேயர்கள் கே எஸ் வேலுச்சாமி கே சரவண தேவி கே சந்தில் கே கனகம் கல் குறிச்சி நேயர் சி அஸ்வின், எம் வந்தீரசேகரன் ஆகியோர் செய்தி அனுப்பியுள்ளனர். அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத் தலைவர் வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் தமிழ்ப் பிரிவின் சாதனைக்கு பாராட்டுத் தெரிவித்து விட்டு, கடந்த 11ம் தேதி ஒலிபரப்பான நேயர் நேரம் சூப்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.
வி-------அன்பான நேயர்களே. எப்போதும் போல உங்களுடைய ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் விஜயலட்சுமி மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். நேயர் நேரம் நிகழ்ச்சியில் திரு ராஜாரம் பெரும் உதவி எனக்கு வழங்கி வருகிறார். அவர் ஒரு திறமையான செய்தியாளர். அவரும் நானும் இணைந்து வழப்கும் நேயர் நேரம் நிகழ்ச்சி பல நேயர்களை கவர்ந்துள்ளது. பல நேயர்கள் கடிதம் மூலம் இதைத் தெரிவித்தனர். இதை அறிந்து மிக மகிழ்ச்சியடைந்தோம். இனியும் தொடர்ந்து முயற்சி செய்வோம். தமிழ்ப்பிரிவின் இந்த சாதனைக்கு நேயர்களாகிய நீங்கம் தொடர்ந்து காட்டி வரும் அன்பும் ஆதரவும் தான் காரணம் அதற்கு நன்றி. உங்களின் ஆதரவு தொடரட்டும்.
ரா-------மே திங்கள் 3ம் நாள் ஒலிபரப்பான சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றிய கடிதம் அணுப்பியவர் வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் படிக்கட்டுமா
வி------படியுங்கள்
ரா-------சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் இறந்தவர்களுக்குச் செய்யப்படும் இறுதிச் சடந்கு என்ற கட்டுரை பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்து கொல்ள விரும்புகின்றேன். இந்நிகழ்ச்சியில் இழவுப் பரிவாரங்கள் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினார்.
திரு ராஜாராம், ஏதோ இது ஒரு முக்கியப் பொருளை உணர்த்துகிற வார்த்தையாக இருக்க வேண்டும். ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தை சரியான மொழியாக்க வார்த்தை அல்ல எனக் கருதுகின்றேன். இழவுப் பரிவாரங்கள் என்ற வார்த்தையின் பொருளை என்னால் புரிந்து கொள்ள முடியாததால் கட்டுரையை என்னால் மனநிறைவுடன் கேட்க முடியவில்லை.
|
|