தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பரவயில்லை
cri
இதே நிகழ்ச்சியைப் பாராட்டி சேந்தமங்கலம் எஸ் எம் ரவிச் சந்திரனும் எழுதியுள்ளார். அவர் கூறுகிறார். ஈமச்சடங்கு ஊர்வலத்தில் காகிதத்தால் செய்யப்பட்ட குதிரைகள், மணித உருவங்கள் குமான்றவற்றை சீன மக்கள் எடுத்துச் சென்று எரிப்பார்கள் என்ற தகவல் அற்புதமானது. பழங்காலத்தில் மன்னர்கல் இறந்து விட்டால் புதைக்கும் போது மண்ணால் செய்த வீரர்களின் விலைகளும் புதைக்கப்பட்டதாக அறிந்தேன். இந்தச் செய்திகல் விந்தையாகவும் வியப்பாகவும் உள்ளன. அதே போல மே 6ம் தேதி ஒலிபரப்பான நிகழ்ச்சியில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தகம் பற்றிய தகவலும் கேட்க சுவையாக இருந்தது. வி-------நேயர்களின் பாராட்டுக்கு நன்றி. சீனாவுக்கு வரும் நேயர்கள் சி ஆண் நகரில் இந்த மண் மொம்மை வீரர்களின் சிலைகளை கண்டுகளிக்கலாம். ராஜா. செல்வம் அவர்கள் கூறிய கருத்து பற்றி என்ன சொல்கிறீர்கள் ரா--------இழவுப் பரிவாரம் என்ற சொல்லில் தவறு ஏதும் இல்லை என்றே நான் கருதுகிறேன். மிகவும் கிந்தித்து, சீர்தூக்கிப்பார்த்த பின்னரே அந்த வார்த்தையை உன்ளுணர்வின் அடிப்படையில் பயன்படுத்தினேன். செல்வம் அவர்களின் கடிதம் வந்ததும் அகராதியைப் புரட்டினேன். சிரியா பதிப்பகம் வெளியிட்டுல்ள தமிழ்ச் சொல் அகராதியில் பரிவாரம் என்பதற்கு உடன் வருகிறவர்கள் என்ற பொருள் தரப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் இறந்தவரின் ஆகியுடன் இந்த காதிதக்குதிரைகளும் ஏவலர்களும் வண்டிகளும் உடன் செல்கின்றன என்று பொருள் கொள்ளலாம். செல்வம் அவர்களே. இது போன்ற உரத்த சிந்தனை மூலம் மற்ற நேயர்களும் பல தகவல்களை தெரித்து கொள்ள முடியும் என்பதால் கருத்துக்களையும் கண்டனங்களையும் வரவேற்கிறோம். நன்றி. அப்புறம் சுனாமி பற்றஇ இலங்கை நேயர் பாத்திமா அனுப்பிய கவிதை மனனத வலிக்கச் செய்தது அவருக்கும் அவருடைய குடும்பத்தார்க்கும் ஆறுதல் தெரிவிக்கிறேன் என்று செல்வம் குறிப்பிட்டுள்ளார். வி---------பாராட்டுக்குளுக்கும், ராஜா சொனன விளக்கத்துக்கும் நன்றி. ரா--------பெரிய காலாப்பட்டு நேயர் பி சந்திர சேகரன் தமிழ்மூலம் சீனம் நிகழ்ச்சி தமது மாணவப் பருவத்தை நினைவுபடுத்துவதாகக் கூறுகிறார். தமிழ்ச் செல்வம் விளையாட்டுச் செய்திகளில் வாரம் ஒரு குட்டி ஒலிம்பிக்கையே நடத்துவதாக குறிப்பிடுகிறார். சீனக் கதையில் இனிய உதயம் நாவல் அழகாகச் சொல்லப்படுகிறது. மீனா வழங்கும் இசை நிகழ்ச்சியில் பாடல்களின் கருத்தையும் அவை கார்ந்த மாநிலத்தின் சிறப்பையும் கூறுவது அருமை என்று பாராட்டியுள்ளார்.
|
|