• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-26 20:40:14    
ஆரோகியத்தை பாதிக்கும் ஆறிப்போன உணவு

cri
நிறுவனங்களில் பணி புரியும் பல ஊழியர்கள் தற்போது காய்களையும் காய்கறி மற்றும் பழச் சாறு குடிக்க விரும்புகின்றனர். இது மனிதருக்கு நேரடியாக சத்தை வழங்கி உடம்பிலிருந்து கழிவு பொருட்களை வெளியேற்றுகின்றது. ஆனாலும் உடம்புறுப்புகளுக்கு என்றுமே மித வெப்ப சூழல் தேவை. உடம்புறுப்புகள் மித வெப்ப நிலையில் இருந்தால் தான் உடம்பின் இயக்கம் இயல்பாக இருக்கும். ஆக்சிஜன் மற்றும் சத்து கிடைப்பது, கழிவுப் பொருட்கள் வெளியேற்றம் ஆகியவை ஒழுங்கான முறையில் நடைபெறும். ஆகவே காலையில் சிற்றுண்டி உண்ணும் போது காய்கறி மற்றும் பழச் சாறு, ஆறிப்போன காபிஃ, உறைந்த பழச் சாறு, ஆறிய கறுப்பு தேனீர், பாசி, ஆறிப் போன பால் போன்ற வெப்பமில்லாத உணவுகளை முதலில் உட்கொள்ளக் கூடாது. இந்த மாதிரியான உணவு பொருட்களை உட்கொண்டதும் குறுகிய காலத்தில் உடம்புக்கு சிரமம் எதுவும் ஏற்படா விட்டாலும் உண்மையில் உடம்பு ஆரோக்கியம் போக போக பலவீனமாகும்.

காலை உணவு உட்கொள்ளும் போது சூடான உணவு உண்ண வேண்டும். இப்படி செயல்பட்டால் இரைப்பை பாதுகாக்க முடியும் என்று பாரம்பரிய சீன மருத்துவம் கருதுகின்றது. இரைப்பை மட்டுமல்ல, மண்ணீரல் மற்றும் இரைப்பையின் செரிக்கும் திறன் நோய் தடுப்பு ஆற்றல், தசை திறன் ஆகியன சூடான உணவு பொருட்களுடன் தொடர்புடையவை

ஏனென்றால் காலை எழந்ததும் இரவில் இருந்த குளிர்ச்சியான காற்று முழுமையாக நீங்கியிருக்காது. பூமியில் வெப்ப நிலை உயராமல் இருப்பதால் உடம்பிலுள்ள தசை நரம்பு மற்றும் ரத்த குழாய்கள் சுருங்கிய நிலையில் உள்ளன. இந்த நேரத்தில் ஆறிப் போன உணவுகளை உட்கொண்டால் உடம்பில் உள்ள பல்வேறு உறுப்புகள் மேலும் சுருங்கும் ரத்த ஓட்டம் தடைப்படும். நீண்டகாலமாக இப்படி இரந்தால் அல்லது வயதாகிய பின், உணவு சத்து உடம்புக்குள் சேர்க்கப்படுவது தடுக்கப்படும். உடல் நிலையும் பலவீனமாகிவிடும். அடிக்கடி ஜலதோஷம் வந்து போகும். உடம்பில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும். ஆகவே காலை உணவு உட்கொள்ளும் போது சூடாக உண்ண வேண்டும், கஞ்சி, பால், அவரைப் பால் போன்ற உடம்புக்குள் எளிதாக செரிக்கக் கூடிய உணவுப் பொருட்களை முதலிலே உட்கொள்ள வேண்டும். பின் சாலாட், ரொட்டி , பழம் முதலிய ஆறி உணவு பொருட்களை உட்கொள்ள லாம்.

வெப்ப நீரில் கால்களை கழுவுவது

காலை உணவை சூடாக சாப்பிட வேண்டும் என்ற சில தகவல் பற்றி கூறிவிட்டோம். ராத்திரி தூங்குவதற்கு முன் உடம்புக்கு என்ன நம்மை செய்ய வேண்டும். கூற்றை பார்த்தால் பாதங்கள் உடம்பின் நலவாழ்வுடன் முக்கியமாக தொடர்புடையவை என்று சீன சுதேசி கருதுகின்றது.

ஆகவே சீன சுதேசி மருத்துவர்கள் நாள்தோறும் படுக்கைக்கு போவதற்கு முன் தாங்கக் கூடிய சூடு உள்ள நீரில் பாதங்களை 15 நிமிடம் வைத்திருந்தால் உடம்புக்கு நன்மை தரும். பாதங்களின் தசையைப் பிடித்துவிடுவது சலாட். முக்கிய மருத்துவ நலவாழ்வு வழி முறையாகும். பாதங்களை மர வேர்கள் என்று மருத்துவ நூல்கள் வர்ணிக்கின்றன. வேர் உயிர் இழந்தால் மரத்துக்கு உயிர் இல்லாமல் போகும். மனித மரம் போல பாதங்கள் உயிரின் முக்கிய காரணியான வேர் போன்றவை. ஆண்டின் 365 நாட்களில் இந்த உடல் பயிற்சியில் ஊன்றிநிற்க வேண்டும் பாதங்களின் அடியில் உடம்பு உறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் சமமாக பரவி இருக்கின்றன. அவற்றின் மீது சூடான தண்ணீர்படும் போது உடம்பில் ரத்த ஓட்டம் துரிதப்பட முடியும்.

நாள்தோறும் சூடான நீரில் பாதங்களை 15 நிமிடம் வைத்திருந்தால் உடல் நலன் கிடைக்கும். நீரின் வெப்பத்தை 40 திகிரி செல்ஸியஸாக கட்டுப்படுத்த வேண்டும். 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை பாதங்கள் சூடான நீரில் மூழ்கி யிருந்தால் தலை வலி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிடும். அப்போது இரண்டு பாதங்களில் உள்ள ரத்த குழாய்கள் வென்னீரின் பாதிப்புடன் விரிவடையும். தலையிலுள்ள ரத்தம் உடம்புறுகளுக்கு முறையே செல்லும். தலை வலி இதனால் குறையும். வெப்ப நீரில் கால்களை ஊற்றினால் காய்ச்சல் குறையும். அடிக்கடி இப்படி செயல்பட்டால் தூக்கம் இழப்பு, தலை வலி, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற அன்றாட நோய்கள் குறைந்துவிடும். இந்த பயிற்சியை தொடர்ந்து களைப்பிடித்தால் நவீன நகர வாசிகளிடையில் அடிக்கடி நிகழும் தொழில் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு குணமடையும். என்று வாழ்க்கையில் அனுபவங்கள் காட்டுகின்றன.