• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-25 07:47:56    
தமிழ் மூலம் சீனம் பாடம் 21

cri
வணக்கம் நேயர்கள், 听众们,你们好。உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கடந்த முறை இரண்டாம் பாடத்தில் தோன்றிய சொற்களுடன் கூடிய ஒரு உரையாடல் நேயர்களுக்கு ஒரு நீளமான உரையாடலை சொல்லிக் கொடுத்தோம். அவர்களுக்கு சற்று கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இந்த உரையாடலை நமது நேயர்கள் கிரகித்துக் கொள்ள அதிக பயிற்சி செய்ய வேண்டும் தான்.

அப்பா, இன்று நாங்கள் முதலில் இந்த உரையாடலை நோயர்களுடன் இணைந்து மீண்டும் பார்ப்போமா?

A. 您好 நின் ஹௌ

B. 您好 நின் ஹௌ

A. 请问, 您贵姓 ஜிங் வென், நின் குய் சிங்

B. 我姓张,您呢?வொ சிங் சாங், நின் ந

A. 我姓王,见到您,我很高兴!வொ சிங் வாங், ஜியன் டௌ நின், வொ ஹென் கௌ சிங்.

B. 见到您,我也很高兴!ஜியன் டௌ நின், வொ யெ ஹென் கௌ சிங்

A. 请问,您在哪儿工作?ஜிங் வென், நின் தை நள் கொங் சோ

B. 我在学校工作,我是老师,您呢!வொ தை சியே சியௌ கொங் சோ, வொ ஷி லௌ ஷி, நின் ந.

A. 我在公司工作。வொ தை கொங் சு கொங் சோ

B. 您工作忙吗?நி கொங் சோ மாங் மா

A. 很忙, 您呢 ஹென் மாங், நின் ந

B. 我也很忙,வொ யெ ஹென் மாங்

A. 欢迎您来我家!ஹுவன் யிங் நின் லை வொ ஜியா

B. 谢谢,再见。சியே சியே, தை ஜியன்

A. 再见 தை ஜியன்

இந்த உரையாடலின் தமிழ் மொழியாக்கத்தை நமது நேயர்களுக்கு மீண்டும் ஒருமுறை தருவோமா?

கண்டிப்பாக, தர வேண்டும்.

A. 您好!வணக்கம்!

B. 您好!வணக்கம்!

A. 请问,您贵姓?தயவு செய்து, உங்கள் குடும்பப் பெயர் என்ன?

B. 我姓张,您呢?என் குடும்ப பெயர் சாங், நீங்கள்?

A. 我姓王,见到您 我很高兴。எனது குடும்பப் பெயர் வாங், உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிச்சியடைகின்றேன்.

B. 我也很高兴。எனக்கும் மகிழ்ச்சி.

A. 请问,您在哪儿工作? நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள் என்று தயவு செய்து சொல்ல முடியுமா

B. 我在学校工作,我是老师,您呢?நான் பள்ளிக்கூடத்தில் வேலை செய்கின்றேன். நான் ஒரு ஆசிரியர், நீங்கள்?

A. 我在公司工作。நான் ஒரு கூட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.

B. 您工作忙吗?உங்கள் வேலை அதிகமா?

A. 很忙,您呢?அதிகம் தான்,உங்களுக்கு?

B. 我也很忙。எனக்கும் வேலை அதிகம்.

A. 欢迎您来我家。என் வீட்டுக்கு வரும்படி வரவேற்கின்றேன்.

B. 谢谢,再见!நன்றி, வணக்கம்!

A. 再见!வணக்கம்!

வான்மதி, இன்று முதல் மூன்றாம் பாடத்தை சொல்லிக் கொடுப்பதாக போன முறை நேயர்களுக்கு கூறியிருக்கின்றோம். இப்பொழுதும் மூன்றாம் பாடத்தின் முதலாம் பகுதியை பார்ப்போமா?

சரி, பார்ப்போம்!

முதலில், ஒரு உரையாடலை பார்ப்போம்.

A: 谢谢你!

B: 不客气!

ஒருவர் உங்களுக்கு உதவி செய்யும் போது, நீங்கள் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அல்லா. சீன மொழியில் 谢谢你 (சியே சியே நி)என்று சொல்ல வேண்டும், அல்லது மரியைதை காட்டும் வகையில் 谢谢您 (சியே சியே நின்)என்று சொல்லலாம். எதிர் தரப்பினர் பதில் சொல்லும் பொது, பொதுவாக 不客气 (பு க்கா ச்சி)என்று சொல்லுவார். அல்லது 不用谢 (பு யோங் சியே)என்று சொல்லுவார்.

வான்மதி, நான் விளக்கி கூறியது சரிதானே?

சரிதான். இப்பொழுது இன்னொரு உரையாடலை நமது நேயர்களுக்கு வழங்கலாமே.

சரி,

A: 谢谢您!

B: 不用谢!

இந்த உரையாடலின் தமிழாக்கத்தை இப்போது நேயர்களுக்கு சொல்லுகின்றோம்.

A: 谢谢您!உங்களுக்கு நன்றி.

B: 不用谢!பலவாயில்லை.

இப்பொழுது இந்த இரண்டு உரையாடல்களை நேயர்கள் மீண்டும் கேளுங்கள்.

A: 谢谢你!

B: 不客气!

A: 谢谢您!

B: 不用谢!