சீனாவின் திபெத், அமைதியான முறையில் விடுதலை பெற்ற பின்பு, மக்கள், குறிப்பாக விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்களின் உடல் நலன் பாதுகாப்பு உயர்ந்துள்ளது.
1951ம் ஆண்டு முதல், மத்திய அரசு, திபெத் பிரதேசத்தில் விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையில் முன்னுரிமை தரும் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. மருத்துவ சிகிச்சை நல வாழ்வு நிலைமை இடைவிடாமல் மேம்பட்டு, திபெத் மக்களின் உடல் நலன் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளில் இருந்ததை விட, திபெதில் திபெத் இன மக்கள் தொகை அதிகரிப்பு, ஒரு மடங்கு கூடுதலாகும். மக்களின் சராசரி ஆயுள், அப்போதைய 35 வயதிலிருந்து தற்போது 67 வயதாக உயர்ந்துள்ளது.
|