மலை ஏற்றம் 2005ஆம் ஆண்டு ஜோங்முலுங்மா மலை சிகரத்தின் உயரத்தை அளவிடும் அணியைச் சேர்ந்த 20க்கும் அதிகமான உறுப்பினர்கள் 22ஆம் நாள் உலகில் மிக உயர்ந்த இந்த சிகரத்தின் உச்சியில் ஏறி, அளவிடும் பணியைத் துவங்கினர். 1975ஆம் ஆண்டு இந்த மலை சிகரத்தை அளவிட்டு அதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8848.13 மீட்டர் என்று வெளியிட்ட பிறகு, இவ்வாண்டு இந்த மலை சிகரத்தை மீண்டும் அளவிட சீனா ஏற்பாடு செய்துள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோகே அண்மையில் சுவீட்சர்லாந்தின் லோசாங்கிலுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையகத்தில் சீன அரசவை உறுப்பினர் சென் ச்சிலியை சந்தித்துரையாடினார். கடந்த பல ஆண்டுகளாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு ஆதரவு உதவியும் வழங்கிவரும் சீன அரசுக்கு ரோகே நன்றி தெரிவித்தார். 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை அவர் பாராட்டினார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டு கமிட்டியுடன் இணைந்து, பல்வேறு வேலைகளை சரிவர செய்ய போவதாகவும் அவர் கூறினார். சீன அரசு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கருத்துக்களை உணர்வுபூர்வமாக கேட்டறிந்து, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை தனிச்சிறப்புடைய உயர் தரமுடைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாக நடத்தி, சீன மற்றும் உலக விளையாட்டுத் துறைக்கு மதிப்புக்குரிய செல்வம் வழங்கும் என்று சென் ச்சிலி கூறினார்.

லாரெஸ் பரிசு 2005 லாரெஸ் உலக விளையாட்டு விருதுகளின் முடிவு அண்மையில் வெளிவந்துள்ளது. சுவீட்சர்லாந்தின் புகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர் பெடரரும் பிரிட்டிஷ் தடகளப்போட்டி வீராங்கனை ஹோம்சும் முறையே ஆடவர் மற்றும் மகளிருக்கான தலைசிறந்த விளையாட்டு வீரர் விருது பெற்றனர். ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீரர் லீயூ சியாங் சிறந்த புதிய வீரருக்கான விருது பெற்றார்
. 
தென் கொரிய நாட்டவர் கிம் யுன் யுங் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 20ஆம் நாள் அறிவித்தது. தற்போது 74 வயதான அவர் 1992ஆம் ஆண்டு இக்கமிட்டியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003ஆம் ஆண்டு முதல் அவர் இப்பதவியில் தொடர்ந்து இருந்து வருகின்றார். கிம் யுன் யுங் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் துணைத் தலைவராக இருந்த போது, 32 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்க டாலர் கையூட்டு பெற்றார். இவ்வாண்டின் துவக்கத்தில் தென் கொரிய உயர் நீதி மன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது அத்துடன், சுமார் 6 லட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்தது.
|