• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-30 21:06:05    
குவான்சியின் வறுமை ஒழிப்புப் பணி

cri

சீனாவின் குவான்சி, சுவான் இன தன்னாட்சி பிரதேசம், பல தேசிய இனங்களின் மக்கள் குழுமி வாழும் எல்லைப்புற வறிய பிரதேசமாகும். அதன் மொத்த பரப்பளவு, 20 லட்சத்து 36 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். இதில், மலையும் குன்றும், 70.8 விழுக்காடாகும். 1986ம் ஆண்டு, குவான்சி, சுவான் இன தன்னாட்சி பிரதேசத்து கிராமத்திலுள்ள வறிய மக்கள் தொகை, 150 லட்சத்தை எட்டியுள்ளது.

வறுமைக்கான காரணங்கள் பற்றிக் குறிப்பிடகையில், தன்னாட்சி பிரதேசத்தின் தேசிய இனக்குழுவின் துணை இயக்குநர் ஹுவான் பின் அம்மையார் கூறியதாவது:

ஒன்று, இயற்கைக் காரணம். எல்லை ஒதுக்குப்புற மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால், இப்பிரதேசத்தில், இயற்கை சூழல் மோசமானது. பொருளாதார உற்பத்தி நிலைமை, பின்தங்கியுள்ளது. போக்குவரத்தும், வசதியற்றது. இரண்டு, சமூகக் காரணம். இப்பிரதேச வறிய மக்களின், கல்வியறிவு, குறைவானது. அவர்களுடைய கண்ணோட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது. வேளாண் துறையிலான பயன்பாட்டு தொழில் நுட்ப அறிவு, குறைவு என்று, அவர் கூறினார்.

கடினமான நிலைமையை எதிர்நோக்கி, குவான்சிஅரசு, வறுமை ஒழிப்பு வளர்ச்சிப்பணியை, முழு பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் ஒட்டுமொத்த திட்டமாகவும், ஆண்டுப்பணியின் மையமாகவும் மேற்கொண்டுள்ளது.

குவான்சிவில், வறுமை ஒழிப்பு வளர்ச்சிப்பணி, 1979ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 2000ம் ஆண்டு வரை, வறிய மக்கள் தொகை, முந்திய ஒரு கோடியே 50 லட்சத்திலிருந்து, 15 லட்சமாக குறைந்துள்ளது. வறுமை ஒழிப்பு அலுவலகத்தின் நிதித்துறைத் தலைவர் சுயுகுவே கூறியதாவது:

20 ஆண்டுகளின் முயற்சி மூலம், 49 வறிய மாவட்டங்களில் நபர்வாரி உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு, 1985ம் ஆண்டின் 370 யுவானிலிருந்து, 2000ம் ஆண்டின் 3727 யுவானாக, அதிகரித்தது. அத்துடன், பெரும்பாலான வறிய மாவட்டங்களில் தனிச்சிற்பபு வாய்ந்த தொழில்கள், அடிப்படையில், உருவாக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

அடிப்படை வசதிக் கட்டுமானத்தில், குவான்சி,மாபெரும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. உற்பத்தி, வாழ்கை மற்றும் உயிரின வாழ்கைச்சூழல் நிலைமை, குறிப்பிடத்தக்க அளவில், மேம்பட்டுள்ளது. முழு பிரதேசத்திலும், 63 ஆயிரம் கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலை, திருத்தியமைக்கட்டுள்ளது. 25 ஆயிரம் கிலோமீட்டர் மின் சாரா கம்பிகள் பொருத்தியமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அறிவியல், தொழில் நுட்பம், கல்வி, பண்பாடு, நல வாழ்வு ஆகியவையும், வெகுவிரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. சுயுகுவே மேலும் கூறியதாவது:

2000ம் ஆண்டுக்கு பின், அடிப்படை வசதிக் கட்டுமானத்தை, வறுமை ஒழிப்புப்பணியின் முக்கிய உள்ளடக்கமாக, நடைமுறைப்படுத்தியுள்ளோம். நாட்டின் வரையறைக்கு இணங்க, நெடுஞ்சாலையை மாற்றியமைத்து, அதன் அகலத்தை, அதிகரித்துள்ளோம் என்றார் அவர்.