• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-30 09:13:00    
எஸ் செல்வம் எழுதிய கடிதங்கள்

cri
------நேயர்களின் இதயங்களோடு உரையாடும் இந்த அருமையான நேரத்தில் ஆக்கமான கருத்துக்கள் கூறி எங்களுக்கு ஊக்கம் தரும் நேயர்கள் அனைவரையும் வரவேற்பது ராஜாராம் விஜயலட்சுமி. ------நேயர்கள் தான் நமது செல்வம் என்பது போல, முதல் கடிதம் வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் எழுதியது. இவர் பல கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள அருமையான கருத்துக்களின் சுருக்கம் ஜனவரி திங்கள் முதலாம் நாள் இடம் பெற்ற செய்திகளில் நிலநடுக்கம் மற்றும் கடல்கொந்தளிப்பாள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சீனா பெரிதும் உதவும் என்பதை அறிந்து மன நிறைவு கொண்டேன். ஆபத்தின் போது உதவுபவனே உண்மையான நண்பன். ஒரு உண்மையான நன்பன் என்பதை நட்பு நாடுகளுக்கு சீனா புரிய வைத்திருக்கிறது என்று கூறி நேயர் செல்வம் பாராட்டியுள்ளார். -------சீனாவின் நட்புணர்வும் இக்கட்டான நேரத்தில் உதவும் பண்பும் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. வளவனூர் புதுப்பாளையம் நேயர் செல்வத்தின் பாராட்டுக்கு நன்றி. அடுத்த கடிதம் ராஜா, அடுத்த ஒரு கடிதம் அல்ல, பல கடிதங்கள் எழுதியவர் சேந்தமங்கலம் நேயர் எஸ் ஆர் ராஜமாணிக்கம். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் 12 வயதிற்கு குறைவான குழந்தைகள் நன்கு தூங்க வேண்டும் சிறுவயதில் சிறுவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்ற செய்தியை சீன வானொலி மூலம் அறிந்தேன். புகை பிடிப்பதைப் பற்றி புகையினால் ஏற்படும் பாதிப்பைப் பற்றியும், அறிந்தேன். இன்றைய அறிவியல் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. பயனுள்ள பல தகவல்களை தந்தது. மீன் கோழி இவைகளையும் பால் தயிரையும் குறைவாக உண்ணலாம் என்று கூறி மனித சமுதாயத்திற்கு எதாண்டுபுரிந்த முனைவர் திரு கடிகாசலம் அவர்களுக்கு சீன அரசு விருது வழங்கி உள்ளது என்பது நல்ல செய்தி ஒரு தமிழருக்கு இந்த விருது கிடைத்தது பற்றி நினைக்கையில் மனம் பூரிப்பு அடைகிறது. என்று சேந்தமங்கலம் நேயர் எஸ் ஆர் ராஜமாணிக்கம் தமது கடந்த டிசம்பர் திங்களில் எழுதிய கடிதங்களில் தெரிவித்துள்ளார் ---------உண்மையில் மக்களிடையே அறிவியல் மனப்போக்கு வளர வேண்டும் என்பதற்காக எதாடங்கப்பட்ட நிகழ்ச்சி அறிவியல் அரங்கம், இது நமது நேயர்களுக்கு பயன் தருவது மகிழ்ச்சி தருகிறது. பாராட்டுக்கு நன்றி. அடுத்த எந்த நேயரின் கடிதம். ---------அடுத்த கடிதமும் சேந்த மங்கலத்தில் இருந்து. நேயர் M R அபுதாஹிர் நம்முடைய பல நிகழ்ச்சிகளை பட்டியல் போட்டு பாராட்டி விரிவான கருத்துக்களை எழுதியுள்ளார்.