• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-31 10:33:19    
சீன பண்பாடு எனும் நிகழ்ச்சி பற்றிய ஆலோசனை

cri
சீன பண்பாடுகள் பற்றிய நிகழ்ச்சியின் மூலம் சீனாவில் நடைபெறும் விழாக்கள் பற்றியும் அவர்களின் பண்பாட்டையும் அறிந்து கொண்டேன். வசந்த விழாவின் போது ஒரு வருக் கொருவர் அன்புடன் வாழ்த்துக் கூறி மகிழ்கின்றனர், மேலும் பெரியவர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் பெறுகின்றனர் என்பது போன்ற பல செய்திகளை அறிய முடிகிறது என்று சேந்தமங்கலம் எம் அ அபுதாஹிர் தமது கடந்த செப்தம்பர் திங்களில் எழுதிய கடிதங்களில் தெரிவித்தார். ---------பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுஹ்கள், அடுத்து ---------சேந்தமங்கலம் எஸ் ராஜநாசிம்மன் சீனக்கதை நிகழ்ச்சியை பாராட்டியுள்ளார். சீன கதை நிகழ்ச்சி இன்று மீனவன் என்னும் கதை வழங்கியவர் ந கடிகாசலம். மன்னர் இனிமையான புல்லாங் குழல் இசையை கேட்டு தன் மகனுக்கு கற்று தருமாறு கூறினார். மீனவன் அதற்கு ஒப்பு கொண்டு கற்று தந்தான் இளவரசனுக்கு. மன்னர் உனக்கு என்ன வேண்டுமே கசானவில் இருந்து எடுத்து செல் என்றார். போர்வையும் கூடையும் எடுத்தான் எனக்கு இது மீன் பிடித்து கொள்ள உதவும். தங்கம், வெள்ளி பணம் என்னை சோம்பேறியாக்கலாம் உழைப்பு எனக்கு வேண்டும் என்று உழைப்பின் பெருமையை உணர்த்தினான். இக்கதை மனித வாழ்க்கைக்கு மிகவும் பொருமை சேர்க்கும் ஒரு பாடம் ஆக இருக்கும். மிகவும் அருமையான கதை இது என்று சேந்தமங்கலம் எஸ் ராஜநாசிம்மன் தமது கடிதங்களில் கருத்து தெரிவித்துள்ளார். ---------உழைப்பே உயர்வு தரும் என்பது பழமொழி. பெரியோர் வாக்கு இது நேயர்களின் மனதில் பதியும் படி முனைவர் கடிகாசலம் கதை கூறியதை பாராட்டிய நேயருக்கு நன்றி. அடுத்ததாக என்ன கடிதம் ----------அடுத்ததாக ஒரு கடிதம் அல்ல ஒரு கொத்துக் கடிதங்கள். எழுதியவர் முனகப்படு P கண்ணன் சேகர். இவர் தமது டிசம்பர் திங்கள் கடிதங்களில் எமது பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக செய்தித் தொகுப்பு பற்றிய கடிதம் சிறப்பாக உள்ளது. எரி ஆற்றலின் தொடர்ச்சியான பயன்பாடு செய்தி தொகுப்பு கேட்டேன். எரி ஆற்றலின் தொடர்ச்சியான சீரான விநியோகத்திற்கு உத்தரவாதம் தருவதள்காக புதுப்பிக்கவல்ல எரி ஆற்றலின் சட்டத்தின் மூலம் சீர்குளைவை மாற்றியமைக்க இருப்பது பாராட்டுக் குரியது. சீன நிரந்தர கமிட்டியின் கூட்டத் தொடரில் புதுபிக்க வல்ல எரி ஆற்றல் பற்றிய வரைவு சட்டம் பரிசிலைனைக்காக சீனாவின் சட்டம் இயற்றல் கமிட்டிக்கு முதன் முறையாக வழங்கப் பட்டுள்ளது பற்றி அறிந்தேன். நல்ல வளர்ச்சிக்கு இந்த சட்டம் வழிவகுக்கும் என்று முனுகப்பட்டு பி கண்ணன் சேகர் தமது கடந்த டிசம்பர் திங்களின் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார்.