• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-03 09:05:02    
சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி நல்லது

cri
-----------பாராட்டுக்கு நன்றி. முனுகப்பட்டு கண்ணன் சேகர் தொடர்ந்து எங்களுக்கு ஆக்கமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். -----------இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள் ---------என்ன வேண்டுகோள் ராஜா ---------நேயர்கள் எமது நிகழ்ச்சிகளில் கூறப்படுவதை அப்படியே படி எடுத்து எழுதாமல் தங்களுடைய மனதில் என்ன உணர்வை ஏற்படுத்தியது என்பதை எழுதியும், தொடர்புடைய கருத்துக்களையும் அனுபவங்களையும் சுருக்கமாக அவைப் பெருக்கமாக தெரிவிக்கலாம். அடுத்த கடிதம் அனுப்பியவர் சேலம் நேயர் ஏ மாதுராஜ். ஒலிபரப்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்டேன். இதில் சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் சமையலறை தெய்வம் பற்றி அறிவிப்பாளர் கடிகாசலம் அவர்கள் கூறியது. பழைய சீனாவில் சமையலறை செய்வம் என்பது தீயைக் கண்டு பிடித்த தெய்வம் என்பதால் மக்களால் வணங்கப்பட்ட தெய்வமாக இருந்தது. ஒவ்வொரு வீட்டின் சமையலறையே சமையல் செய்வத்தின் வழிபாட்டுத் தலமாக விளங்கியது. இந்த தெய்வத்தின் வாகனமாக கரப்பான் பூச்சி உள்ளதாக நம்பப்படுகிறது. இரண்டு ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட இந்த சமையல் அரை தெய்வத்தை வழிபடும் சமயத்தில் ஒரு குவளை தண்ணீர் மூன்று ஊதுபத்திகள் வைத்து வணங்கப்படுகிறது. வசதி உள்ள காலத்தில் சர்க்கரையை வைத்து வனங்குகிறோம் என்று எழுதி மன்னிப்பு வின்ணப்பம் வைக்கப்படுகிறது. கதை ஒன்றும் நிகழ்ச்சியில் சொல்லப்பட்டது. நிகழ்ச்சியை வழங்கிய கடிகாசலம் அவர்களுக்கும் என் இனிய சீன வானொலிக்கும் என் நன்றிகள் ---------ஒரு விஷயம் தெரியுமா, சமையல் அறையே சதி என்று கிடந்து நமக்கு உணவு அளிக்கும் தாயையும் நாம் தெய்வமாக வணங்குகிறோம். ---------என் நண்பர் ஒருவர் தமது மனைவியை வாழவைத்த தெய்வம் என்பார் . சரி அடுத்த கடிதம். மதுரை செல்லூர் நேயர் நா சீனிவாசன் தற்காப்புக்கலை கற்கப் போகிறாராம். --------அப்படியா -------ஆமாம். சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் தற்காப்புகலை பயிற்சி கல்வி முறையான ஊசு பயிற்சி பற்றிய தகவல்கள் பசு மரத்தாணியாய் மனதில் பதியும் படி வழங்கப்பட்டது. அருமை. முதலில் ஒழுக்கமான கலை பயிற்சி, பின்னர் கல்வி எனும் ஒழுக்க நெறியுடன் கூடிய ஊசு பயிற்சியை நாங்களும் கற்று கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் எங்களுக்குள் இப்போது விதையாக விழுந்துவிட்டது என்று செல்லூர். நா. சீனிவாசன் தமது கடிதங்களில் தெரிவித்தார்.