• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-01 11:36:17    
தமிழ் மூலம் சீனம் பாடம் 22

cri
வணக்கம் நேயர்களே, 听众,你们好! 大家好!உங்களை மீண்டும் சந்தித்துள்ளோம். நான் தமிழ்ச் செல்வம், நான் வான்மதி.

கடந்த முறை மூன்றாம் பாடத்தை நாம் படிக்கத் துவங்கியுள்ளோம். நாம் இரண்டு சிறிய உரையாடல்களை படித்துள்ளோம். பாடத்துக்குப் பின் நீங்கள் பயிற்சி செய்தீர்களா. வான்மதி, நமது நேயர்கள் அந்த இரண்டு உரையாடல்களை ஏற்கனவே கிரகித்துக் கொண்டுள்ளனர் என்று நான் நினைகிறேன். உங்கள் கருத்து என்ன?

நானும் அப்படி நினைக்கின்றேன். ஏனேன்றால், நமது நேயர்கள் எங்களுக்கு தொலைபேசி பன்னும் போது, அடிக்கடி, 谢谢,再见 என்று சொல்லுகிறார்கள்.

ஏனென்றால், நமது முந்திய பாடங்களில் இந்த சொற்கள் ஏற்கனவே பல முறை தோன்றின.

ஆனால், 不客气, 不用谢,என்ற இரண்டு பதில் வாக்கியங்கள் நேயர்களுக்கு புதியவை தான். இப்பொழுது கடந்த முறை படித்த இரண்டு சிறிய உரையாடல்களை மீண்டும் பார்க்கலாமா?

பார்க்கலாம், நேயர்கள் எங்களோடு சேர்ந்து பயிற்சி செய்யலாம்.

A: 谢谢你!

B: 不客气!

A: 谢谢您!

B: 不用谢!

வான்மதி, இப்பொழுது நாங்கள் இன்னொரு உரையாடலை படிக்கலாமா?

கண்டிப்பாக, படிக்கலாம், முதலில் இரண்டு சொற்களைப் படிக்கின்றோம். நீங்கள் மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கும் போது, ஒருவர் உங்களிடம் வந்து உதவி செய்தார். அப்பொழுது, நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

மிக்க நன்றி, மிக மிக நன்றி!

சரி தான், அப்பா, சீன மொழியில் நாங்கள் எப்படி, சொல்லுகின்றோம்.

多谢,多谢!,太感谢了!

மிக சரி, தான், வான்மதி, இப்பொழுது இந்த இரண்டு சொற்களை நீங்கள் நமது நேயர்களுக்கு விளக்கம் தர முடியுமா?

முடியும், நான் முயற்சிக்கின்றேன். எங்கே, சரியில்லை என்றால் நீங்கள் திருத்துங்கள்.

சரி, 多谢!என்பது, மிக்க நன்றி என்று பொருள், இதில் 多 என்றால், அதிகம், பல என்பது பொருள், 谢 என்றால், நன்றி என்பது பொருள், இரண்டும் சேர்ந்தால், பல நன்றிகள், தமிழ் மொழியிலும் இப்படி சொல்லுவதுண்டு அல்லவா.

நமது நேயர்கள் எங்களுக்கு கடிதம் எழுதும் போது, அடிக்கடி நன்றிகள் பல என்று எழுதுவார்கள்.

太感谢了! என்றால் மிக மிக நன்றி என்பது பொருள், 太 என்ற சொல், அளவை குறிப்பிடும் ஒரு சொல்லாகும். மிக மிக என்பது பொருள். 感谢 என்றால், 谢谢 தான். இரண்டு சொல்களுக்குமிடையில் வித்தியாசம் இல்லை. எனவே太感谢了 என்ற வாக்கியம், 太谢谢了 என்றும் சொல்லலாம்.

இப்பொழுது நேயர்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.

多谢,多谢!

太感谢了!

வான்மதி, இப்பொழுது நேயர்களுக்கு ஒரு உரையாடலை சொல்லிக் கொடுப்போமா?

கண்டிப்பாக!

多谢,多谢!

不要客气,你不要谢我。

வான்மதி, இந்த உரையாடலின் தமிழாக்கத்தை தருங்கள்.

多谢 என்றால், மிக மிக நன்றி என்பது பொருள், நன்றியுணர்வைப் புலப்படுத்துவதற்காக, பொதுவாக, இரண்டு முறை சொல்ல வேண்டும். அதாவது, 多谢,多谢!

不要客气என்றால், உங்களை வரவேற்கின்றோம் என்று பொருள்.

你不要谢我。என்றால் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டாம் என்பது பொருள். இரண்டும் சேர்ந்தால், உங்களை வரவேற்கிறோம், எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டாம் என்பதாகும்.

இங்கு 要 என்றால், வேண்டும் என்பது பொருள், 不 என்ற சொல், எதிர்மறையை குறிக்கின்றது. எனவே, 不要 என்றால், வேண்டாம் என்பது பொருள் தான். ஒன்றைச் செய்யக்கூடாது அல்லது செய்ய வேண்டாம் என்று கூறுவதற்கு 不要 என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.