• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-02 11:45:34    
நீருக்கடியில் பிறக்கும் குழந்தை

cri
ஒரு பெண்ணுக்கு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது வாழ்க்கையில் மிகவும் சிக்கலான ஒரு கடமை. வேதனையும் வெறுப்பும், சலிப்பும், இன்பமும் துன்பமும் கலந்த ஒரு அரிய அனுபவம் இது. பத்து மாதத் தவத்தின் நிறைவாக அருமையான முத்துப் பிள்ளையைப் பெற்றெடுத்து தாய்மை என்ற தகுதியை சமூதாயத்தில் பெறுகிறாள் பெண்.

ஆனால் பிரசவ நேரத்தில் அவளுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்களைப் பார்க்கும் போது இனி குழந்தையே பெறக் கூடாது என்று அவளும் அவளைப் பார்க்கின்ற இதர இளம் பெண்களும் பிரசவ வைராக்கியம் பூணுகின்றனர். ஆனால் இது சிறிது நேரத்திற்குத் தான். கைகளில் மழலை தவழத் தொடங்கியதும் இந்த பிரசவ வைராக்கியம் சூரியனைக் கண்ட பனி போலக் கலைந்து விடுகின்றது.

பிரசவ காலத்தில் பெண்ணுக்கு ஏற்படக் கூடிய வலியைக் குறைக்க பல வழி முறைகளை மகப் பேறு மருத்துவர்கள் பின்பற்றுகின்றனர். அவற்றிலே அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முறைதான் நீரில் பரிசவம். பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்கத் தொடங்கியதுமே அவள் வெதுவைதுப்பான சுடுநீரில் குளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தாதியர்கள் கூறிவருவதாக மருத்துவ இதழ்கள் தெரிவிக்கின்றன. 1977ல் டாக்டர் மைக்கேல் ஓடென்ட் என்பவர் பிரான்ஸ் நாட்டின் பித்திவியரஸ் நகரில் உள்ள தமது மருத்துவமனையில் செயற்கையான ரப்பர் குளியல் தொட்டி ஒன்றை உருவாக்கி அதில் பிரசவவலி எடுத்த பெண்களை இறங்கச் செய்து பிரசவம் பார்த்தார். இதனால் பிரசவவலியின் வேதனை குறைந்து விட்டதால் மிகவும் பிரபலமடைந்தது. இந்தத் தொட்டியில் தண்ணீரின் வெப்ப நிலை 36 டிகிரி அல்லது 37 டிகிரி செல்ஷியளாகப் பராமரிக்கப்படுகின்றது. தண்ணீருக்குள் இறங்கி இருந்து கொண்டு பிரசவிப்பதால் வலி பெரிதும் குறைவதோடு உடம்பை மிகச் சுலபமாக இயக்கி குழந்தையை வெளியே கொண்டு வர முடிகின்றது. மேலும் பிரசவ நேரம் இரண்டு மணி நேரமாகக் குறைகின்றது. பிரசவ நேரத்தில் கிருமித் தொற்றும் ஏற்படுவது இல்லை.

இதுவரை 70 நாடுகளில் இந்த நீரியல் பிரசவ முறை பின்பற்றப்பட்டுள்ளது. அண்மையில் சீனா இதில் 71வது நாடாகச் சேர்ந்துள்ளது. சீனாவில் முதன்முதலாக மா நான் என்ற பெண்மணி இரண்டாண்டுகளுக்கு முன்பு 2003ம் ஆண்டு மார்ச் முதல் தேதி ஷாங்கையில் நீர்த் தொட்டியில் பிரசவம் செய்தார். இப்போது அதே முறைப்படி இரண்டாவது குழந்தையைப் பெறுவதற்குத் தயாராகி வருகின்றார்.

ஷாங்கை மாநகரின் மருத்துவ மனையில் கடந்த மூன்றாண்டுகளில் 320 பெண்கள் நீர்த் தொட்டியில் பிரசவித்துள்ளனர். ஆனாலும் பல சீனப் பெண்கள் இதில் தயக்கம் காட்டுகின்றனர். பிரசவ வலி என்பது மிதவும் சிக்கலான ஒரு கட்டம். அதை இவ்வளவு எளிதில் தீர்த்துவிட முடியாது என்று கூறுகின்றனர். ஆனால் சுமார் 100 சீன தாதிப் பெண்களிடத்தில் ஆய்வு நடத்தியதில் 90 விழுக்காட்டினர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று டாக்டல் ரோங் கூறுகிறார்.

அப்படியானால் நீருக்கடியில் குழந்தை பிறப்பது என்பது புராணக் கதைகளோடு நின்று விடாமல் நமது வாழ்க்கையிலும் இயல்பான ஒன்றாக மாறிவிடும்.