• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-02 11:50:05    
மாரடைப்புக்குப் புதிய மருந்து

cri
இந்த உலகில் மாரடைப்பு ஒரு மாபெரும் உயிர்க் கொல்லி நோய் என்பதில் எந்த வித சந்தேசமும் இருக்க முடியாது. நேற்றிருந்தார் இன்றில்லை என்ற நிலையை அது உண்டாக்கி விடுகின்றது. சீனாவில் 3 கோடி இதய நோயாளிகள் இருப்பதாகவும் இவர்களில் சுமார் 20 லட்சம் பேர் ஒவ்வோர் ஆண்டும் இறக்கின்றனர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே 2001 முதல் 2005 வரையிலான பத்தாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் இதய நாள அடைப்பு நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சீன அறிவியல் அறிஞர்கள் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். வெளிநாட்டு மருந்துகளைக் காப்பியடிக்காமல் உள்நாட்டுத் தொழில் நுட்பத்துடன் புதிய மருந்துகளை உருவாக்கி கண்டுபிடிப்புக் காப்புறுதி பெரும் பணியில் அறிவியல் அறிஞர்களை சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம் இறக்கியது.

இந்த அயரா முயற்சிகளின் விளைவாக ஊசி மூலம் செலுத்தப்படும் recombinationg staphylokinase என்ற மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட்ட 6 மணி நேரத்திற்குள் ஊசி மூலம் இந்த மருந்தில் 10 நில்லிகிராண் உடம்பில் செலுத்தினால் ரத்த உறைவு விரைவில் கலைந்து ரத்த ஓட்டம் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றது. 80 விழுக்காட்டுக்கும் அதிகமான இதய நோயாளிகள் இந்தப் புதிய மருந்தினால் குணமடைவார்கள் என்பது மருந்தக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என்று சீன அறிவியல் கழகத்தின் பேராசிரியர் வாங் சியாசியுன் கூறுகின்றார். இது போன்ற மருந்துகள் அமெரிக்கா, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இன்னமும் மருந்தக பரிசோதனை ஆய்வு நிலையிலேயே உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இதய நாளத்தில் ரத்தம் உறைந்து ரத்த ஓட்டத்தைத் தடுத்து மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்காக ஒரு தடுப்பு மருந்தாக இந்தப் புதிய மருந்தைப் பயன்படுத்தலாமா என்றும் ஆராயப்படுவதாக வாங் தெரிவித்தார்.

புற்றுநோய்க்கும் எய்ட்ஸ் நோய்க்கும் சிகிச்சை அளிக்கும் புதிய மருந்துகளையும் சீன அறிவியல் அறிஞர்கள் உருவாக்கியிருப்பதாக அறிவியல் தொழில் நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். சீனா கியூபா கூட்டு நிறுவனமான BIOTECH PHARMACEVTILAC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய புற்று நோய் மருந்துக்கு அரசு உணவு மருந்து நிர்வாகத் துறை அணுமதி கொடுத்துள்ளது. இந்தப் புதிய மருந்தினால் புற்றுநோய் குணமடையும் விகிதம் 30 விழுக்காடு உயரக் கூடும் என்று அதிகாரி தெரிவித்தார்.