• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-03 20:51:40    
தைவான் ஓவியர் சான் புயின்

cri

சான் புயின் அம்மையார், தைவானின் புகழ்பெற்ற ஓவியர் ஆவார். அவரின் ஓவியக் கண்காட்சி இப்பொழுது சீன தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சாதனைகள் பலபுரிந்த, அவர், பல ஆண்டுகளாக ஏழை கலைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தொடர்ந்து உதவி அளித்து, இரு கரையின் பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கு பாடுபட்டு வருகின்றார்.

இந்த கண்காட்சியில், அவருடைய 70 ஓவியப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான படைப்புகள், கடந்த சில ஆண்டுகளில் அவர் தீட்டிய மிகச்சிறந்த ஓவியங்களாகும். அன்குவை மாநிலத்திலுள்ள மஞ்சள் மலை, யுவான்னான் மாநில்ததிலுள்ள கல் காடு, சிசுவான் மாநிலத்திலுள்ள சியு சாய்கு, ஹுநான் மாநிலத்திலுள்ள சான் சியாசியே உள்ளிட்ட சீனாவின் புகழ்பெற்ற இயற்கை காட்சி பிரதேசங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. அவருடைய ஓவியங்கள் உயிரோட்டத்துடன் இயற்கையாக இருக்கின்றன.

70 வயதான சான் புயின், குள்ளமானவர். நரைத்த தலை முடி இருந்த போதிலும், துடிப்பானவர்.

அவர், தைவானின் மியேளலி இனத்தை சேர்ந்தவர். குடும்பத்தின் வறுமையால், அவர் குழந்தை காலம் முதல், குடும்பப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. அவருக்கு ஓவியம் வரைவது மிகவும் விருப்பமாக இருந்தது. ஓவியத்தைக் கற்கும் கனவை நனவாக்க அவர் பணத்தைத் திரட்ட பாடுபட்டார். அவர் கூறியதாவது:

அப்போது, வீட்டில் உணவு இல்லை. எனவே, படிப்புக்காக பணம் கேட்க முடியாது. இதனால், நான் படம் எடுப்பதைக் கற்க, சின்சு நகரத்துக்குச் சென்றேன். 6 திங்களுக்கு பிறகு, படம் எடுப்பதை நம்பி வாழ்க்கை நடத்தினேன். மனிதர்களைத் தவிர, இயற்கை காட்சிகளை படம் எடுத்துள்ளேன். ஆகவே நான் படிப்படியாக படம் எடுப்பதை புரிந்துகொண்டுள்ளேன் என்றார் அவர்.

அப்பொழுது 14 வயதான சான் புயின், படம் டெவலப் செய்யும் கருவியை வாங்க, பணம் இல்லாததால், சூரிய ஒளியை பயன்படுத்தி, படத்தை டெவலப் செய்து, சில தாள் பெட்டிகளை பயன்படுத்தி பெரித்தாக்கு இயந்திரத்தைத் தயாரித்தார். இப்படிப்பட்ட கடின நிலைமையிலும், அவரின் படம் எடுக்கும் தொழில் நுட்பம் மேன்மேலும் சிறப்பாக முன்னேறியது. ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் படம் எடுக்கும் போட்டியில் அவர் பல முறை பரிசு பெற்றார்.

18 வயதில், சான் புயின் ஓவியம் வரையக் கற்றுக்கொள்ள துவங்கினார். இதற்கு பிறகு, அவர் ஓவிய உலகில் நுழைந்து, அனைத்து இன்னல்களையும் மறந்து விட்டார். அவர் கூறியதாவது:

ஓவியத்தினால், நான் அனைத்து துன்பத்துயரத்தையும் மறந்து விட்டேன். ஓவியத்தைத் தீட்டும் போது, மனம் தெளிந்த நீர் போல் அமைதியாக இருக்கின்றது என்றார் அவர்.