வணக்கம் நேயர்களே, 听众们, 大家好! தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நான் தமிழ்ச் செல்வம்.
听众们, 你们好! அன்புள்ள நேயர்களே, வணக்கம். வான்மதி உங்களை மீண்டும் மகிழ்ச்சியுடன் சந்திக்கின்றேன்.
கடந்த இரண்டுமுறைகளில் நாம் மூன்றாம் பாடத்தை படிக்கத் துவங்கியுள்ளோம். வான்மதி கடந்த முறைகளில் நாங்கள் சற்று வேகமாக சொல்லிக் கொடுத்து, வேகமாக படித்துள்ளோம், நேயர்கள் புரிந்துகொள்வதற்கு கஷ்டமாக இருப்பார்கள் என நான் நினைக்கின்றேன். இன்று புதிய பாடத்தை படிக்காமல் கடந்த இரண்டு முறைகளில் படித்த இரண்டு உரையாடல்களை மட்டும் பார்ப்போம் எப்படி?
நானும் அப்படி நினைக்கின்றேன்.
இப்பொழுது முதலாவது உரையாடலை பார்ப்போமா?
சரி பார்ப்போம்.
A: 谢谢你!
B: 不客气!
ஒருவர் உங்களுக்கு உதவி செய்யும் போது, நீங்கள் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அல்லா. சீன மொழியில் 谢谢你 (சியே சியே நி)என்று சொல்ல வேண்டும், அல்லது மரியைதை காட்டும் வகையில் 谢谢您 (சியே சியே நின்)என்று சொல்லலாம். எதிர் தரப்பினர் பதில் சொல்லும் பொது, பொதுவாக 不客气 (பு க்கா ச்சி)என்று சொல்லுவார். அல்லது 不用谢 (பு யோங் சியே)என்று சொல்லுவார்.
வான்மதி, நான் விளக்கி கூறியது சரிதானே?
சரி தான்.
இப்பொழுது இந்த உரையாடலை நேயர்களுக்கு மீண்டும் படிக்கின்றோம் நேயர்கள் கவனமாக கேளுங்கள்.
A: 谢谢你!
B: 不客气!
வான்மதி不客气!என்ற வார்த்தைக்கு பதிலாக, வேறு என்ன வார்த்தை சொல்லலாம்.
不用谢 என்று சொல்லலாம்.
இப்பொழுது இன்னொரு உரையாடலை பார்க்கலாமா?
பார்க்கலாம்.
谢谢您
不用谢
இப்பொழுது இந்த இரண்டு உரையாடல்களை நேயர்களுக்கு படிப்போமா?
படிப்போம்.
A: 谢谢你!
B: 不客气!
A: 谢谢您
B:不用谢
இந்த இரண்டு உரையாடல்களை நேயர்கள் மீண்டும் கேளுங்கள்.
A: 谢谢你!
B: 不客气!
A: 谢谢您
B: 不用谢
நேயர்களே, இன்று இரண்டு உரையாடல்களை மீண்டு படித்துள்ளோம். புரிந்ததா, பாடத்துக்குப் பின் அதிகமாக பயிற்சி செய்யுங்கள்.
நேயர்களுக்கு ஒரு நல்ல தகவலை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மூலம் சீனம் என்று நிகழ்ச்சிக்கான பாடநூலின் முதலாவது தொகுதி ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ளது. யாருக்கு தேவை என்றால், எங்களுக்கு கடிதம் எழுதினால் நாங்கள் அனுப்புவோம். முகவரியை ஆங்கில மொழியில் அல்லது தமிழ் மொழியில் தெளிவாக எழுதுங்கள்.
|