
2008 பெய்சிங் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ஹேண்ட் போல் போட்டிக்கான தேசிய விளையாட்டு உள் அரங்கத்தின் கட்டுமானம் மே 28ஆம் நாள் பெய்சிங்கில் அதிகாரபூர்வமாக துவங்கியது. இந்த அரங்கத்தில் 18 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்காக மொத்தம் 31 விளையாட்டு அரங்கங்களை புதிதாக கட்டலாம், மாற்றியமைக்கலாம், அல்லது தற்காலிகமாக அமைக்கலாம். அனைத்து அரங்கங்களும் 2007ஆம் ஆண்டின் இறுதியில் கட்டிமுடிக்கப்படும்.
இலவச போக்குவரத்து 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நாட்களில், நுழைவு சீட்டு வைத்திருக்கும் ரசிகர்கள், பணியாளர்கள், தொண்டர்கள், பதிவு செய்தவர்கள் அனைவரும் பஸ், சுரங்க ரயில், பறக்கும் ரயில் முதலிய போக்குவரத்து வசதிகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்று பெய்சிங் போக்குவரத்து நிர்வாகப் பிரிவு அண்மையில் அறிவித்தது.
படகு விடும் போட்டி உலகக் கோப்பைக்கான ரப்பர் படகு விடும் போட்டியின் ஜெர்மன் சுற்று 29ஆம் நாள் DUISBURG நகரில் நிறைவடைந்தது. இப்போட்டியில் சீன அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை பெற்றது. ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீரர்கள் ஜோடி, ஆடவருக்கான இரட்டையர் 200 மீட்டர் படகு விடும் போட்டியில் சாம்பியன் பட்டமும், ஆட்டவருக்கான இரட்டையர் 500 மீட்டர் படகு விடும் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றனர். மகளிருக்கான நால்வர் 500 மீட்டர் படகு விடும் போட்டியில் சீன அணி வெண்கல பதக்கம் வென்றது. மகளிருக்கான 1000 மீட்டர் ஒற்றையர் படகு விடும் போட்டியில் சீன வீராங்கனை வெண்கல பதக்கம் பெற்றார்.

வாள் வீச்சு போட்டி செனகல் நாட்டில் உலக கோப்பைக்கான ஆடவர் வாள் வீச்சு போட்டி மே திங்கள் 29ஆம் நாள் நிறைவடைந்தது. அன்று நடைபெற்ற குழுப் போட்டியில் சீன அணி 5ஆம் இடம் பெற்றது. இத்தாலி சாம்பியன் பட்டம் பெற்றது. பிரான்ஸ் இரண்டாம் இடத்தையும் உக்ரைன் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
ஜுன் திங்கள் 4ஆம் நாள் 2005 பிரான்ஸ் டென்னிஸ் ஒப்பன் போட்டியின் மகளிருக்கான இறுதிப் போட்டியில் பெல்ஜிய வீராங்கனை ஹை நிங் 2-0 என்ற செட் கணக்கில் பிரான்சின் பில்ஸைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார்.
|