
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டு கமிட்டியும் சீன எண்ணெய் மற்றும் இயற்கை வாயு குழுமும ஒரு உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. எதிர்வரும் 4 ஆண்டுகளில் இந்த குழும நிறுவனம், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் கமிட்டி, சீன ஒலிம்பிக் கமிட்டி, துலிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும் கலந்துகொள்ளும் சீன விளையாட்டு பிரதிநிதிக் குழுக்கள் அவற்றுக்கு நிதியையும் சேவையையும் வழங்கும்.

தடகளப் போட்டி சர்வதேச தடகள சம்மேளனம் ஏற்பாடு செய்த பொன் போட்டி, ஹெல்சிங்கி உலக சாம்பியன் பட்டப் போட்டி ஆகியவற்றுக்காக தயார் செய்யும் பொருட்டு, சீனத் தடகள விளையாட்டு வீரர் லியூ சியாங் ஜுன் திங்களின் இறுதியில் பிரான்ஸ் செல்வார். அவர் இந்த தகவலை அறிந்த பின் பேசுகையில், 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்த விண்ணப்பிக்கும் பிரான்ஸுக்கு தாம் முழு மூச்சுடன் ஆதரிப்பதாகவும், பாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் கூறினார்.

சீனாவின் தாலியன் நகரில் ஜுன் திங்கள் 3ஆம் நாள் நடைபெற்ற சர்வதேச மகளிர் கைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் சீன அணி 3-1 என்ற செட் கணக்கில் கியூப்ப அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. இது நிங்போ நகரில் நடந்த போட்டியை அடுத்து சீன அணி சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே இரண்டாம் முறை.

மலை ஏற்றம் மே 27ஆம் நாள் சீனாவின் திபெத் மலை ஏற்ற அணியைச் சேர்ந்த 11 பேர் பாகிஸ்தானின் வட பகுதியில் அமைந்துள்ள உலகில் 11வது மலை சிகரமான PEAK GRASHERBRUM 1 சிகரத்தில் ஏற இருந்த போது, திடீரென்று மலைச் சரிவு ஏற்பட்டதால், ஒருவர் உயிரிழந்தார். பத்து பேர் காயமுற்றனர். 28ஆம் நாள் காயமுற்றவர்கள் எல்லாரும் சிகிச்சை பெற, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
|