சீனாவின் 15வது புத்தகக் காட்சி சீனாவின் தியென் சின் மாநகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. காட்சியில் அறிவியல் வளர்ச்சி கண்ணோட்டம், இணக்க சமூகத்தை உருவாக்குவது தொடர்பான அரசியல் புத்தகங்களை பிரச்சாரம் செய்வது தவிர, குழந்தைகளுக்காகவும் இளைஞர்களுக்காகவும் தயாரிக்கப்பட்ட புத்தகங்களில் போதியளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 30க்கும் அதிகமான சிறுவர்களுக்கான வெளியீட்டகங்கள் 140க்கும் அதிகமான வகை சிறுவர் இதழ்களையும் 110க்கும் அதிகமான வகை சிறுவர் ஏடுகளையும் வெளியிட்டு சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தார்மீக உணர்வை வழங்கின. தியென் சின் நகர் குழந்தைகளுக்கான புத்தகங்கள் தயாரிக்கும் தளமாகும். இந்த காட்சியில் அது சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் 200க்கும் வகை புத்தகங்களை வைத்துள்ளது. அதேவேளையில் புதிய நிலைமையில் எவ்வாறு சிறுவர்களுக்கான புத்தகங்களை தயாரிப்பதில் வழிகாட்டுவது பற்றிய சிறப்பு கலந்துறையாடலில் கலந்து கொள்ள அமைப்பு கமிட்டி சீன மத்திய பிரச்சார அமைச்சின் வெளியீட்டக ஆணையத் தலைவர் சான் சியௌ யின், பல நிபுணர்கள் ஆகியோரை அழைத்தது.
வெளியீடுத் துறையில் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி அக்கறை ஈர்க்கும் தலைப்பாக மாறியுள்ளது. தற்போது சீனாவின் வெளியீட்டுத் துறையின் சீர்திருத்தம் முக்கியமான காலத்தில் நுழைந்துள்ளது. இந்த துறையிலான எதிர்காலத்தை எந்த திசையில் கொண்டு செல்வது என்பது போன்ற பிரச்சினை புத்தகக் காட்சி நடைபெற்ற போது செய்தி வெளியீட்டுத் தலைமை ஆணையத்தின் துணை தலைவர் ஊ சு லின் உள்ளிட்ட உள்நாட்டு சில தலைசிறந்த வெளியீட்டங்களின் தலைவர்கள் இப்பிரச்சினைகள் பற்றி ஆழமாக ஆராய்ந்து விவாதித்தனர். இது வெளியீட்டுத் துறையில் மறு மொழி எழுப்பியது.
இந்த புத்தகக் காட்சி நடைபெற்ற போது முக்கிய நினைவு நடவடிக்கைக்கான பிரச்சாரத்துக்கு துணை புரியும் வகையில் பிரச்சார புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இவ்வாண்டு சப்டெம்பர் திங்கள் 3ம் நாள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன போர் வெற்றி பெற்ற 60வது ஆண்டு நிறைவாகும். அதேவேளையில் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 60வது ஆண்டு நிறைவாகும். அக்டோபர் திங்கள் சீன தொழிலாளர் மற்றும் விவசாயிகள் இடம் பெற்ற செம் படை மேற்கொண்ட நெடும் பயமம் வெற்றிகரமாக சேன்பேய் செந்றடைந்த 70வது ஆண்டு நிறைவாகும். புத்தகக் காட்சியில் இது தொடர்பான புத்தகங்கள் 150க்கும் அதிகமாக இடம் பெற்றன. உலக பாஃசிச எதிர்ப்பு புத்தக வகைகள் சுமார் 100 ஆகும். எண்ணிக்கையில் மட்டுமல்ல வகைகளிலும் இவை அதிகம். ஓவியங்கள் எழுத்துக்கள் நிறைந்திருந்தது புத்தகக் காட்சியின் மிக தனிச்சிறப்பாகும். தவிர, 1 லட்சத்து 40 ஆயிரம் வகை புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பண்பாட்டு தன்மை வாய்ந்த உயர் தரமான கல்வியியல் புத்தகங்கள் காட்சியில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அரசின் வரலாற்று பதிப்பாசிரியர் கமிட்டி பிரச்சாரம் செய்த 31 வகை வரலாற்று ஆராய்ச்சி புத்தகங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
|