• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Tuesday    Apr 8th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-09 18:28:49    
கைகளைத் தட்டினால் நோய் குணமாகும்

cri
கைகளைத் தட்டி நமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பது உலகம் முழுவதும் உள்ள நல்ல பழக்கம். கைகளைத் தட்டினால் 90 சதவீத நோய்கள் குணமாகின்றன என சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைகளைத் தட்டும் போது ஏற்படும் உடலின் அதிர்வுகள் ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்குகின்றன என மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு நோய்களுக்கு அடிப்படைக் காரணமாகும். ரத்தக் இந்த அடைப்பு நீங்குவதினால் ரத்த நாளங்களில் எல்லாப் பகுதிகளிலும் ரத்த ஓட்டம் தங்குதடையின்றி சீராக நடைபெறுகின்றது. இதனால் ரத்த நாளங்களில் படியும் கொழுப்பு நீக்கப்படுகின்றது.

உடல் உறுப்புகளின் நரம்பு நுனிகள் கைகளில் முடிவடைகின்றன. கை தட்டுவதால் ஏற்படும் இந்த அதிர்வுகள் நரம்பு மண்டலத்திலுள்ள தேவையற்ற முடிச்சுக்களை நீக்கி நரம்பு மண்டலத்தைச் சீராக்குகின்றது. உணர்வுகளும் இதனால் சீர்படுகின்றது. ரத்த ஓட்டமும் நரம்பு மண்டலமும் சீராகி பலமடைவதால் உடலில் 90 சதவீத நோய்கள் குணமாவது சாத்தியமாகின்றது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தளுகோமா நோய் கைகளைத் தட்டுவதன் மூலமாக குணமாவது. மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. கைகளைத் தட்டுவதன் மூலமாக நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என ஆய்வாளர்கள் சில பரிந்துரைத்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் கைகளைத் தட்ட வேண்டும். ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 தடவை வரை கைகளை தட்டலாம்.

கை தட்டல் ஒலி பலமாகக் கேட்க வேண்டும் என்பதில்லை. வயதானவர்கள் படுத்துக் கொண்டே இந்தப் பயிற்சியை செய்யலாம். இந்தப் பயிற்சிக்கு வயது வரம்பு ஏதுமில்லை. கைதட்டல் பயிற்சியின் மூலமாக ரத்த அழுத்தம் இதய நோய் சர்க்கரை நோய் எலும்பு தொடர்பான நோய்கள் குணமாகியுள்ளன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கைகளை தட்டும் பயிற்சியும் ஒரு விதத்தில் தியானப் பயிற்சியே என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கை தட்டுவதினால் மனம் அமைதி அடைகின்றது. சுவாசம் ஒழுங்காகின்றது.

உலக சுகாதார நிறுவனம் கை தட்டும் பயிற்சியை புதுவித யோகா பயிற்சியாக அங்கீகரித்துள்ளது என்பது கைத்தட்டல் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் உணர்த்துகின்றது.

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040