• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-09 18:35:37    
போர் கைதிகள் பற்றிய தகவல்

cri
அண்மையில் யசுக்குனி கல்லறை பற்றிய பிரச்சினை சீன-ஜப்பானிய உறவில் மையப் பிரச்சினையாகியுள்ளது. யசுக்குனி கல்லறையில் முதல் ரகப் போர் குற்றவாளிகளின் நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டன. முதல் ரகப் போர் குற்றவாளி என்றால் என்ன என்பது பற்றி விளக்கம் சொல்லலாமா?என்று சீனாவின் சான்சி மாநிலத்தின் நேயர் வென் ச்சி கேட்கிறார்.

இதற்குப் பதில் 2வது உலக போர் முடிந்ததும் வெற்றி பெற்ற நாடுகள் அடுத்தடுத்து நியூரம்பர்க் சர்வதேச ராணுவ நீதி மன்றத்தையும் டோக்கியோ சர்வதேச ராணுவ நீதிமன்றத்தையும் நிறுவின. தோல்வியடைந்த நாடுகளின் சில நாட்டு தலைவர்கள் முதன்மை அல்லது முக்கிய போர் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் விசாரணை செய்யப்பட்டனர். அவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நடத்தப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது. இந்த முதன்மை அல்லது முக்கிய போர் குற்றவாளிகள் சில வேளையில் முதல் ரகப் போர் குற்றவாளிகள் என்று அழைக்கப்பட்டனர். முதல் ரகப் போர் குற்றவாளி என்பது மக்கள் பொதுவாக கல்வி நூல்களிலும் செய்தி அறிவிப்பிலும் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். அதிகாரப்பூர்வமான சர்வதேச ஆவணங்களில் முக்கிய போர் குற்றவாளி அல்லது முக்கிய போர் கைதி என அவர்கள் அழைக்கப்பட்டனர்.

தூர கிழக்கு சர்வதேச ராணுவ நீதி மன்றத்தின் சாசனத்தின் 6வது

விதியிலும் நியூரம்பர்க் சர்வதேச ராணுவ நீதி மன்ற சாசனத்தின் 5வது விதியிலும் சமாதானத்தை சீர்குலைக்கும் குற்றம் இழைத்தவர்கள் மிக முக்கிய குற்றவாளியாக அழைக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே CLASS A போர் குற்றவாளி என்ற சொல் இதன் மூலம் ஏற்பட்டது. சாதாரண போர் குற்றவாளிகளும் மனித உரிமை நீறல் குற்றம் இழைத்தவர்களும் CLASS B, CLASS C போர் குற்றவாளிகளாக பிரிக்கப்பட்டனர். நியூரம்பர்க் ராணுவ நீதி மன்றத்தில் புலன்விசாரணை செய்யப்பட்ட கோலின் உள்ளிட்ட 22 முக்கிய நாஸி போர் குற்றவாளிகளும், டோக்கியோ நீதி மன்றத்தில் புலன்விசாரணை செய்யப்பட்ட றைடேகிதோஜோ உள்ளிட்ட 28 முக்கிய ஜப்பானிய போர் குற்றவாளிகளும் சமாதானத்தை சீர்குலைக்கும் குற்றத்தையும் ஆக்கிரமிப்பு குற்றத்தையும் இழைத்தார்கள் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் CLASS A போர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர். அவர்கள் ஆக்கிரமிப்பு போரில் முக்கிய குற்றவாளிகளாக அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இரண்டு தனிச்சிறப்புகள் உண்டு. ஒன்று அவர்களின் பதவி உயர்வானது. அதிகாரமும் மிக பெரியது. நாட்டு தலைவர் என்ற தலைமையில் அவரின் பதவி சேர்ந்தது. இரண்டு, நியூரம்பர்க் மற்றும் கியோடோ சாசனங்களில் வகுக்கப்பட்ட திட்டமிடுதல், ஆயத்தம் செய்தல், போர் தொடுத்தல் நடைமுறைபடுத்தல் உள்ளிட்ட முக்கிய குற்றங்களை இந்த முதல் ரகப் போர் குற்றவாளிகள் இழைத்தனர். அவர்கள் இழைத்த குற்றங்கள் நீதி மன்றத்தால் மிக கடும் சர்வதேச குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இதில் அனைத்து குற்றங்களும் அடங்கும்.

சர்வதேச விதிகளின் படி, முதல் ரகப் போர் குற்றவாளிகள் பெரும்பாலும் சர்வதேச ராணுவ நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். சாதாரண போர் குற்றம் அல்லது மனித உரிமை மீறல் குற்றம் இழைத்த போர் குற்றவாளிகள் பி, அல்லது சி போர் குற்றவாளிகளாக தண்டனை அளிக்கப்பட்டனர். அவர்கள் குற்றம் இழைத்த நாட்டின் ராணுவ நீதி மன்றத்தால் விசாரிக்கப்பட்டு செய்யப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும்.