சீனாவில் சேவை தொழிலின் வளர்ச்சி
cri
எதிர்கால வெளிநாட்டுத் திறப்பு பணியில், சேவை தொழிலை சீன அரசு முக்கியமாக கவனத்தில் கொள்ளும் என்று சீன வணிக அமைச்சர் Bo Xilai கூறியுள்ளார். இன்று ஷாங்காய் மாநகரில் துவங்கிய உலக சேவை வர்த்தக கருத்தரங்கில் பேசிய அவர், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணி நடைமுறைக்கு வந்த பின், சீனாவின் சேவை வர்த்தகம் விரைவாக வளர்ச்சியுற்று வருகின்றது என்றார். கடந்த ஆண்டு, சேவை வர்த்தகம் மூலம், 12860 கோடி அமெரிக்க டாலர் கிடைத்தது. இது உலகில் 9வது இடத்தில் உள்ளது என்று கூறினார். இனிமேல், சரக்கு வர்த்தகத்தில் கவனம் செலுத்துவது போல், சேவை வர்த்தகத்தின் வளர்ச்சியிலும் சீனா கவனம் செலுத்தும். அன்னிய முதலீட்டை ஈர்க்கும் முக்கிய துறையாக சேவை தொழில் மாறும் என்று அவர் கூறினார்.
|
|