• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-10 17:25:54    
சீன உயர் கல்வி நிலையங்களின் நிர்வாகம்

cri
தற்போது சீனாவில் சுமார் ஈராயிரம் உயர் கல்வி நிலையங்கள் உள்ளன. சுமார் ஒரு கோடியே 30 லட்சம் மாணவர்கள் இவற்றில் கல்வி பயில்கின்றநர். மாணவர்கள் அறிவு பெறும் அதேவேளையில் உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் அடைய வேண்டுமல்லவா?இதற்காக சீன கல்வி அமைச்சகம் அண்மையில் உயர் கல்வி மாணவர்களுக்கான புதிய நிர்வாக விதிகளை வெளியிட்டுள்ளது. இது இவ்வாண்டு செப்டம்பர் முதலாம் நாள் நடைமுறைக்கு வரும்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சீனாவின் வொருளாதாரமும் சமூகமும் வேகமாக வளர்ச்சி கண்டுள்ளன.டமூதச்சிஸும் ரெகரும் மாக்கம் ஏற்பட்டுள்ளது. இவை உயர் கல்வியின் கருத்தோட்டம் அமைப்பு முரை ஆகியவற்றுக்கு பெரும்தாக்கத்தை விளைவித்துள்ளன. இதனிடையில் தற்போதைய பல்கலைக்கழக மாணவர்கள் பெரும்பாலோர் அரசின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின் பிறந்தவர்கள். முந்தைய மாணவர்களுடன் ஒப்பிடும் போது அவர்களுடைய கருத்துக்கள் மேலும் சுதந்திரமாக உள்ளன. ஆனால் தற்போது நடைமுறையிலுள்ள நிர்வாக விதிகள் 15 ஆண்டுகளுக்கு முன் வகுக்கப்பட்டவை. அவற்றின் உள்ளடக்கம் காலத்திற்கு ஏற்றதல்ல. இத்தகைய பிள்ளணியில் சீனா புதிய நிர்வாக விதிகளை வெளியிட்டுள்ளது.

தற்போதைய மாணவர்களின் தனிச்சிறகப்புக்களுக்கு ஏற்ப புதிய விதிகளில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்களின் சட்டப் பூர்வமான உரிமைகளையும் நலன்களையும் பேணிக்காப்பது தொடர்பான விதிகள் மக்களின் கவனத்தைச் சிறப்பாக ஈர்த்துள்ளன. சீனக் கல்வி அமைச்சின் மாணவர் பகுதி தலைவி லின் குய் சின் அம்மையார் கூறியதாவது புதிய விதி முறையில் கட்டுப்பாட்டை மீறும் மாணவர்களுக்கு தண்டனை விதிகள் மேலும் தெளிவாக உள்ளன. அதை ஒடை முறைப்படுத்தும் செயல் முறைகளும் மேலும் ஒழுங்கானவை என்றார் அவர்.

புதிய விதி முறையில் பல்கலைக்கழக மாணவர்கள் திருமணம் செய்வது பற்றி வகுக்கப்பட்ட விதிகள் அண்மையில் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு துறைகளின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. மாணவர்கள் கல்வி பயிலும் போது திருமணம் செய்யக் கூடாது என்று பழைய விதி கூறியது. ஆனால் சில உயர் கல்வி நிலையங்கள் இது பற்றி சில வளைந்து கொடுக்கும் நடவடிக்கைகளை கடைப்பிடித்துள்ளன. அதாவது வயதுக்கு வந்த மேற்படிப்பு மாணவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றது. இந்தப் புதிய விதி முறை பல்கலைக்கழக மாணவர்கள் திருமண் செய்வதற்கு தடை விதிப்பதில்லை.

இது குறித்து சீனாவின் புகழ்பெற்ற சின் குவா பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவி வுவாங் லின் சின் கூறியதாவது தற்போது சீன பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் தோற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது முன்பு போல் இல்லை. எனவே இந்த விதி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டது என நான் கருதுகிறேன். இதனால் மாணவர்கள் சொந்தமாக தெரிவு உரிமையைத் தேர்ந்தெடுக்க முடியும். இப்போது மாணவர்கள் அமைசியாக உள்ளனர் என்றார் அவர்.

21 வயதான வுவாங்கிற்கு காதலன் உள்ளார். அரசு சட்டம் விதித்த திருமண வயதை அவர் அடைந்த போதிலும் மணம் செய்ய அவர் விரும்பவிலில்லை. பல்கலைக்கழகத்திலுள்ள சிறப்பான வாய்ப்பைப் பற்றிக் கொண்டு கல்வி பயில வேண்டும் என்று அவர் விரும்பினார். வேலைக்கும் போன பின் திருமணம் செய்யலாம் என்று அவர் கூறினார். எமது செய்தியாளர் இன்னும் சில மாணவர்களைப் பேட்டி கண்டார்.

பட்டதாரி மாணவர்கள் மனதளவில் இன்னூம் முழுமையான முதிர்ச்சி அடையவில்லை. தங்களிடம் பணமும் இல்லை. திருமணம் செய்வது சாத்தியமாகாது. பட்டம் பெற்ற பின் மாணவர்களுக்கு கொஞ்சம் வயதாகும். பணமும் தேவையும் இருந்தால் அவர்கள் மணம் செய்யலாம் என்று அவர்கள் கூறினர். தாம் மணம் செய்ய தயாராக இல்லை என்ற போதிலும் பட்டம் பெற்ற மாணவர்கள் மணம் செய்ய விரும்பினால் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவ்ப்பதாக அவர்கள் மேலும் கூறினார்.

புதிய விதி முறை மனித இயல்பு வாய்ந்த நிர்வாகத்தை வலியுறுத்தி பல்கலைக்கழகத்தின் சுய நிர்ணய உரிமையை வலுப்படுத்தும் அதே வேளையில் வேறு சில துறைகளில் கண்டிப்பான விதிகளை வகுத்துள்ளது. எடுத்துக்காட்டாக கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களில் தேர்வில் மோசடி கொஞ்சம் கடுமையாகவே உள்ளது. இதற்கு எதிராக புதிய விதி முறை தேர்வில் மோசடி செய்த மாணவர்கள் அல்லது பிறின் ஆய்வு கனிகளை களவாடி காப்பி அடித்த மாணவர்களை விலக்கலாம் என்ற விதி வகுத்துள்ளது. இவ்விதி மிகவும் இனஅறியமையாதது என்று பீக்கிங் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சாங் சௌ லின் கருதுகின்றார். அவர் கூறியதாவது

தேர்வில் மோடசி செய்வது என்ற நிலைமை கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கடுமையாக உள்ளது. தன்னிச்சை படி வளர விட்டால் சில மாணவர்கள் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டமளிப்பு சான்றிதழ்களைப் பெற்ற போதிலும் அவர்களுடைய உண்மையான நிலை அவ்வளவு தரமானதாக இல்லை. எனவே தேர்வு மோசடி பற்றிய புதிய விதி மிகவும் இன்றியமையாதது என்று நான் கருதுகிறேன் என்றார் அவர்.

புதிய விதி முறை நடைமுறைக்கு வந்த பின் சீனாவின் உயர் கல்வி மேலும் சீராக வளர்வதற்கு இது மேலும் ஆக்கப்பூர்வமான பங்காற்றும் என்று மாணவர்கள் பொதுவாக கருதுகின்றனர்.