உருமுச்சி பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தை
cri
14வது உருமுச்சி வெளிநாட்டுப் பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தை செப்டம்பர் திங்களின் துவக்கத்தில் சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உருமுச்சியில் நடைபெறவுள்ளது. மத்திய மற்றும் மேற்காசிய மண்டல பொருளாதார ஒத்துழைப்புக்கான தொடர்பு அரங்கை கட்டுவதற்கும், இம்மண்டல பொருளாதார ஒத்துழைப்பை முன்னேற்றுவிப்பதற்கும், இப்பேச்சுவார்த்தை பாடுபடும். ரஷியா, கஜக்ஸ்தான், பாக்கிஸ்தான், ஈரான் முதலிய நாடுகள் இதில் கலந்து கொள்ளும். உருமுச்சி பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை, வட மேற்கு சீனாவின் மிகப் பெரிய, மன்நோக்கமுடைய சர்வதேச பொருளாதார வர்த்தக நடவடிக்கையாக மாறியுள்ளது. இப்பேச்சுவார்த்தை அமைப்பு துவங்கப்பட்ட கடந்த 13 ஆண்டுகளில், வெளிநாட்டு வர்த்தக வருமானம் மொத்தம் 2070 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.
|
|