• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-16 09:09:54    
கடந்த வாரத்தில் விளையாட்டுப் போட்டிகள்

cri

ஜுன் 4ஆம் நாள் அமெரிக்காவின் OREGON மாநிலத்தின் EUGENE இல் நடைபெற்ற புகழ்பெற்ற தடகள வீரர்கள் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான சீன வீரரான லியூ சியாங் 13.06 வினாடி என்ற சாதனையுடன் ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். இது இவ்வாண்டு உலகில் மிக சிறந்த சாதனையாகும். லியூ சியாங் அமெரிக்காவில் இத்தகைய போட்டியில் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும். 4 முறை சாம்பியன் பட்டம் பெற்ற உலக சாம்பியனான அமெரிக்க வீரர் ALEN JOHNSON உம் இப்போட்டியில் கலந்துகொண்டார். ஆனால் ஓட்டம் தொடஹ்கிய போது அவர், விதி மீறியதால், போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஜுன் 11ஆம் நாள் நியூயார்க்கில் நடைபெறும் சர்வதேச தடகளப் போட்டியில் லியூ சியாங் கலந்துகொள்வார்.

உலகக் கோப்பைக்கான மகளிர் வாள் வீச்சுப் போட்டியின் தனிநபர் போட்டி மற்றும் குழுப் போட்டியின் ஸ்பெயின் சுற்று ஜுன் திங்கள் 5ஆம் நாள் பார்சலோனாவில் நிறைவடைந்தது. சீன மகளிர் அணி திறமையுடன் விளையாடியதால் இப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்றது. ரஷிய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ஜெர்மன் அணி மூன்றாம் இடம் பெற்றது.

2005 சீன மேசைப் பந்து அணிப் போட்டி 5ஆம் நாள் ஷான்துங் மாநிலத்தின் ஜினான் நகரில் துவங்கியது. துவக்க விழாவுக்கு பின் நடைபெற்ற முதலாவது போட்டியில் குங் லிங் ஹுய்யும் லியூ கோ செங்கும் இடம்பெறும் ஷான்துங் மாநில அணி 3-0 என்ற ஆட்டக்கணக்கில் லியோ நிங் அணியைத் தோற்கடித்தது.

ஜுன் திங்கள் 5ஆம் நாள் பிரெஞ்சு டென்னிஸ் ஒப்பன் போட்டியின் ஆடவருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இளம் வீரர் NADAL 4-0 என்ற செட் கணக்கில் ஆர்ஜேன்டின வீரர் மரியானோ PUERTA ஐத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். 4ஆம் நாள் நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் பெய்ஜிய வீராங்கனை ஜஸ்டின் ஹெனின் பிரெஞ்சு வீராங்கனை மேரி PIERCE ஐத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தேசிய மகளிர் கைப்பந்து அணி ஜுன் திங்கள் 4ஆம் நாள் இரவு சீனப் பயிற்சியாளர் லாங் பிங்கின் தலைமையில் அமெரிக்காவின் COLORADO மாநிலத்தில் முதலாவது போட்டியில் கலந்துகொண்டது. இறுதியில் அமெரிக்க அணி 1-3 என்ற செட் கணக்கில் பிரேசில் அணியிடம் தோல்வி கண்டது. ஆனால் போட்டி மிகவும் உக்கிரமாக நடைபெற்றது. புள்ளிகளிலும் அதிக வித்தியாசம் இல்லை.