• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-13 11:55:01    
மதுரை ஐராவதநல்லூர் நேயரின் கடிதங்கள்

cri
வி-------நம்பிக்கை என்பது எப்போதும் நம்பகமான கை அது உங்களை கைவிடாது. பாராட்டுக்கு நன்றி. ரா-------மதுரை ஐராவதநல்லூர் எஸ். பாண்டிய ராஜன் எழுதிய கடிதம். மார்சு திங்கள் நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் லிசு இன மக்களின் திருமண்ச் சடங்கு பற்றிய தகவல்களை பயனுள்ளது என்கிறார் மதுரை செல்லூர் நேயர் என் சீனிவாசன் நமது ஏப்ரல் திங்கள் நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். சீன வானொலியில் தமிழ் புத்தாண்டை ஒட்டி 11-4-2005 முதல் 16.4 2005 வரை 15 முறை தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொல்லப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். வி------கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி. அடுத்து யாருடைய கடிதம் ரா------சேந்தமங்கலம் எஸ் எம் ரவிச்சந்திரன் பிப்ரவரி திங்கள் நிகழ்ச்சிகளை குறிப்பாக மோசுவோ இன மக்கள் பற்றிய சீன பண்பாடு நல வாழ்வுப் பாதுகாப்பில் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக ஆகாயத் தாமரைச் செடிகளை வளர்ப்பது சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் வசந்த விழாவை எய்ட்ஸ் நோயாளிகளுடன் கொண்டாடியது போன்றவற்றைப் பாராட்டியுள்ளார். நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சிக்காக டாக்டர் அர்ஜீளை பேட்டி கண்ட கண்ணன் சேகருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். வி--------பாராட்டுக்கு நன்றி. சரி ராஜா மின்னஞ்சல்கள் உண்டா ரா--------பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நேயர் ரா ஆனந்த பாபு தமது மின்னஞ்சலில் ஆதிமனிதன் யார் என்ற அறிவியல் கட்டுரை பயனுள்ளதாக இருந்தது என்று பாராட்டியுள்ளார். சிறப்பு நேயர் வி டி ரவிச்சந்திரன் பெய்ச்சிங் வந்திருந்த போது ஒலிபரப்பப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை கோயம்புத்தூர் கோ ராதாகிருஷ்ணன் சென்னை சேகர் வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் பாராட்டியுள்ளனர். கொக்கு நடனக்கலை, சீனாவில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்படும் புத்தர்கோயில் ஆகிய இரு நிகழ்ச்சிகளையும் மலர்ச்சோலையில் தார்வழி முத்து அனுப்பிய தகவல்களையும் செல்வம் பாராட்டியுள்ளார். கடைசியாக மதுரை செல்லூர் சீனிவாசன் தமது மின்னஞ்சலில் மதுரை மாவட்டம் நேயர் மன்றக் கூட்டம் நடந்ததை பற்றி நிழல்படத்துடன் தெரிவித்துள்ளார். கூடவே நேயர் நேரம் நிகழ்ச்சி பற்றிய கண்டனக் கருத்துக்களையும் மதுரை மாவட்ட நேயர் மன்றம் சார்பாக மின்னஞ்சல் செய்துள்ளார். மணமேடு எம் தேவராஜாவும் நேயர் நேரம் நிகழ்ச்சி தரவில்லை என்று எழுதியுள்ளார். வி-------நேயர்களின் பாராட்டுக்கு நன்றி நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும் மற்றபடி சீன வானொலிக்கு விரும்பு வெறுப்பு கிடையாது. தொடர்ந்து எழுதுங்கள் போற்றுங்கள் தூற்றுங்கள் வரவேற்கிறோம். சரி இத்துடன் இன்றைய நேயர் நேரம் முடிந்துக் கொள்வோம். நன்றி ரா-----வணக்கம்.