பாதுகாப்பு அவையின் சீர்திருத்தத்தம் பற்றிய சீனாவின் நிலைப்பாடு தொடர்ச்சியானது. தெளிவானது. வளரும் நாடுகளில் பெரிய நாடான சீனா பாதுகாப்பு அவையின் சீர்திருத்திற்கு ஆதரவளித்து வருகின்றது. வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்திற்கு முன்னுரிமை கொடுத்து பாதுகாப்பு அவையை விரிவாக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்துகின்றது. மேலும் கூடுதலான நாடுகள் குறிப்பாக நடுத்தர மற்றும் சிறிய நாடுகள் பாதுகாப்பு அவையில் சுழல் அடிப்படையில் சேர்ந்து கொள்கை வகுக்கும் வாய்ப்பினை பெற வேண்டும் என்று சீனா கூறுகின்றது. ஜுன் திங்கள் 9ம் நாள் பாதுகாப்பு அவையின் சீர்திருத்தம் பற்றி கொண்டு வரப்பட்ட வளரவுத் தீர்மானத் திருத்தத்தில் பல்வேறு தரப்புகளிடையே கருத்து வேற்றுமை அதிகமாக உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்த நிலைமையில் உறுப்பு நாடுகளின் ஒற்றுமைக்கும் ஐ.நாவின் நீண்டகால செயல்திறனுக்கும் துணை புரியும் வகையில் ஜனநாயக முறையில் விவாதம் நடத்தி பல்வேறு தரப்புகளுக்கு ஏற்புடைய பொது கருத்து அடிப்படையில் தீர்வு ஒன்றைச் கண்டறிய வேண்டும். கருத்து வேற்றுமை இன்று பெரிதாக உள்ள நிலையில் சில நாடுகள் பக்குவமடையாத திட்டத்தை கட்டாயபடுத்தினால் ஐ.நாவின் சீர்திருத்தம் சரியான திசையில் அமையாது. இது ஐ.நா சீர்திருத்தத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் செப்டம்பர் திங்களில் நடைபெறும் உச்சி மாநாட்டுக்கான ஆயத்த பணிக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும் என்று செய்தித் தொடர்பாளபர் கருத்து தெரிவித்தார். பல நாடுகளை போல சீனாவும் இது பற்றி கவலைபடுகின்றது. அதேவேளையில் இந்த நாடுகளின் கட்டாயப்படுத்தும் செயல்முறைகளை சீனா உறுதிபட எதிர்க்கின்றது.
இது வரை பாதுகாப்பு அவையின் சீர்திருத்தத்தம் பற்றிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் மனப்பான்மை ஒரேமாதிரியாக இல்லை.
ஐ.நாவின் பாதுகாப்பு அவையின் அளவு மிக சிறியது. ஆனால் அதிகாரம் மிகவும் பெரியது. உலகின் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணிக்காப்பதற்கு அது பொறுப்பேற்கின்றது. இது மட்டுமல்ல அது நிறைவேற்றும் தீர்மானம் எல்லா நாடுகளையும் கட்டாயப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இதுவே இப்பிரச்சினையில் ஐந்து உறுப்பு நாடுகளின் நுணுக்கமான மனப்போக்கிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இது மட்டுமல்ல இந்த நாடுகளுக்கு சில பொதுவான கருத்துக்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, சீர்திருத்தம் காரணமாக ஐ.நா பிளவுபடுவதைக் காண ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் விரும்ப வில்லை. சர்வதேச பல தரப்பு மற்றும் கூட்டு செயல்பாட்டுக்குரிய ஒரு அமைப்பு முறையாக ஐ.நா கருதப்படுகின்றது. ஐ.நாவின் சீர்திருத்தம் படிப்படியாக நடைபெற வேண்டும். விவாதித்து கருத்தொற்றுமை கண்டு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். ஐ.நாவை தேக்க நிலையில் வைக்காமல் முன்கூட்டியே கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளையும் கட்டாய வாக்கெடுப்பையும் எதிர்க்க வேண்டும் என்று ஐந்து நிரந்த உறுப்பு நாடுகள் விரும்புகின்றன. இரண்டு, பாதுகாப்பு அவை விரிவாக்கப்பட்டால் அதற்கும் மறுப்பாணை ்திகாரத்துக்கும் தொடர்பு இருக்க கூடாது என்று அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளும் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் தெளிவாக தெரிவித்துள்ளன.
நான்கு நாடுகள் கூட்டணி நிரந்தர உறுப்பு நாடுகளின் வரிசையில் சேரலாமா என்பது ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளின் மனப் பான்மையை பொறுத்திருக்க வேண்டும். ஏன்னென்றால் ஐ.நா சாசனத்தை திருத்துவதில் மறுப்பாணை அதிகாரத்தை அவை கொண்டுள்ளன. சர்வதேச விவகாரங்களில் இந்த ஐந்து நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு தரப்புகள் தீர்மானம் கொண்டு வரும் போது இந்த ஐந்து நாடுகளின் மறு மொழிவையும் மனப்பான்மையையும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். சில நாடுகள் தயங்குவதற்கு இந்த ஐந்து நாடுகளின் மனப்பான்மையே மிகவும் முக்கிய காரணம். அவற்றின் மனப்பான்மை அவை இறுதி முடிவு செய்வதற்கு நேரடியாக தாக்கம் ஏற்படுத்தும்.
|