நேயர்களே, கடந்த முறை நாங்கள் இரண்டு உரையாடல்களை மீண்டும் படித்துள்ளோம். வான்மதி உங்கள் ஞாபகத்தில் இன்னும் இருக்கின்றதா,
ஆமாம், இருக்கிறது. முதலாவது உரையாடல் 谢谢你! 不客气!
இப்பொழுது நேயர்கள் எங்களுடன் சேர்ந்து படிக்கலாம்.
谢谢你!
不客气!
வான்மதி இரண்டாம் உரையாடல் என்ன?
இரண்டாம் உரையாடல், 谢谢您! 不用谢!
நேயர்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள்
谢谢您!
不用谢!
தமிழ்ச் செல்வம், 不客气!不用谢!ஆகிய இரண்டு வாக்கியங்களுக்கிடையில் என்ன வித்தியாசம்!
வித்தியாசம் ஒன்றுமில்லை. ஒரே பொருள் தான், பரவாயில்லை என்று பொருள். நேயர்களே, இந்த இரண்டு உரையால்களையும் நீங்கள் கிரகித்துகொண்டீர்களா, இல்லை என்றால் அவற்றை மீண்டும் ஒரு முறை படியுங்கள். இன்று நாம் இன்னும் இரண்டு உரையாடல்களை மீண்டும் பார்ப்போம். முன்பு நாம் ஒரு முறை படித்தோம். வான்மதி நினைவில் இருக்கின்றதா
இருக்கின்றது, முதலாவது உரையாடல் 谢谢你们! 不谢!不谢!
இப்பொழுது நேயர்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள்
谢谢你们!
不谢!不谢!
வான்மதி, இங்கு不谢!不谢!என்ன பொருள், நீங்கள் நேயர்களுக்கு விளக்கிக் கூறுங்கள்.
不谢!என்றால், நன்றி சொல்ல வேண்டாம், இருக்கட்டும், அதெல்லாம் வேண்டாம் என்பது பொருள்.
இப்பொழுது இந்த உரையாடலை மீண்டும் படிக்கின்றோம்.
谢谢你们
不谢!不谢!
வான்மதி இன்னொரு உரையாடல் என்ன?
多谢,多谢! 不要客气! 你不要谢我!
இந்த உரையாடல் சற்று நீளம். முதலில் நாங்கள் நேயர்களுக்கு படிக்கின்றோம். எப்படி?
சரி, படிப்போம்.
多谢,多谢!
不要客气! 你不要谢我!
வான்மதி, இந்த உரையாடலை நேயர்களுக்கு விளக்கம் நீங்கள் சோல்லுங்கள்.
சரி, நான் சொல்லுகிறேன். 多谢,多谢! என்றால், மிக மிக நன்றி என்பது பொருள், 不要客气 என்றால், உங்களை வரவேற்கின்றோம் என்பது பொருள். 不要谢我 என்றால், எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டாம் என்று பொருள்.
வான்மதி, இப்பொழுது இந்த உரையாடலை நேயர்களுக்கு மீண்டும் படிப்போமா?
படிப்போம்,
多谢,多谢!
不要客气, 你不要谢我!
இப்பொழுது இன்று படித்த இரண்டு உரையாடல்களை நேயர்கள் எங்களுடன் சேர்ந்து இன்னொரு முறைப்படியுங்கள்.
நேயர்களுக்கு ஒரு நல்ல தகவலை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மூலம் சீனம் என்று நிகழ்ச்சிக்கான பாடநூலின் முதலாவது தொகுதி ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ளது. யாருக்கு தேவை என்றால், எங்களுக்கு கடிதம் எழுதினால் நாங்கள் அனுப்புவோம். முகவரியை ஆங்கில மொழியில் அல்லது தமிழ் மொழியில் தெளிவாக எழுதுங்கள்.
|